உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியர்

அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியர்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்துள்ளார்.திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. 62 மாணவர்கள் படிக்கின்றனர். நுாறு ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி, குடிநீர் வசதியில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை.கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த பணம் ரூ.65 ஆயிரத்தில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார். இது குறித்து கதிரவன் கூறியதாவது: கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் பயனில்லை. மாணவிகள் கழிப்பறை செல்லாமல் இருக்க தண்ணீர் குடிக்காமல் இருந்தனர். இதனால் அவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தேன் என்றார். தலைமை ஆசிரியர் கதிரவனை திருவாடானை மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
மார் 01, 2025 18:52

மிகவும் நல்ல புண்ணிய செயல் இது. ஒரு சாதாரண ஆசிரியர் செய்த செயலை கூட செய்யமுடியாத வக்கத்த ஒரு அரசா இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு என்று ருசுசெய்து காண்பிக்கிறது இந்த கேவல அரசு


kannan
மார் 01, 2025 17:35

உங்கள் பணி மகத்தானது. வணங்குகிறேன்


veeramani
மார் 01, 2025 09:25

கேரளாவில் பள்ளிகள் இயங்குவதுபோல் தமிழ்நாட்டிலும் இயங்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி அடிக்கப்பட்டு. அப்போது அனைத்து மாணவர் மாணவியை தண்ணீர் குடிக்கவேண்டும் அதுவும் ஆசிரியர் முன்பாக. இதனால் பிள்ளைகளின் தண்ணீர் தேவையை அருமையாக சமாளிக்கிறார்கள். அடிப்படை அசதி இல்லாமல் தென் தமிழ் மாவட்டங்களில் பல் பல பள்ளிகள் இயங்குகின்றன .


Rajan A
மார் 01, 2025 06:45

இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எல்லாத்தையும் அரசே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும். எல்லா பள்ளி, கல்லூரிகளும் இப்படிப்பட்ட ஆசிரியர் இருந்தால் நல்லது


Mani . V
மார் 01, 2025 05:09

இது அரசு செலவில் கட்டப்பட்டது என்று போலி பில் தயாரித்து 76 லட்ச ரூபாயை அரசியல்வாதிகள் ஆட்டையைப் போட வாய்ப்பிருக்கு.


என்றும் இந்தியன்
மார் 01, 2025 18:54

அப்படி நிச்சயமாக இந்த கேடுகெட்ட அரசில் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 03:44

வணங்குகிறேன் கதிரவன் அய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை