உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சருக்காக வெடித்த பட்டாசால் தீப்பற்றிய கோவில் கோபுரம்

அமைச்சருக்காக வெடித்த பட்டாசால் தீப்பற்றிய கோவில் கோபுரம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, அஞ்சனாட்சி அம்மன் உடனுறை மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மக பிரம்மோத்சவ விழா நடந்து வருகிறது.ஏழாம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், அமைச்சர் காந்தி பங்கேற்றார். அவரை வரவேற்று, தி.மு.க.,வினர் வெடித்த பட்டாசு தீப்பொறி பறந்து, அப்பகுதியில் கும்பாபிஷேக பணிக்கு தயாராகி கொண்டிருந்த செல்வவிநாயகர் கோவில் கோபுரம் மீது விழுந்தது.தீப்பொறியால், கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த தென்னங்கீற்று எரிந்தது. திருமால்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
மார் 10, 2025 19:52

இந்துசமய துரோகத்துறை ஏதாவது புது கோயில் கட்டியிருக்கிறாதா என்ன . கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கவே திருட்டு திராவிட களவானிங்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்துசமய துரோகத்துறை


முக்கிய வீடியோ