உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் பெண்ணை கொன்று ஏற்காட்டில் உடலை வீசிய கொடூரம்

கோவையில் பெண்ணை கொன்று ஏற்காட்டில் உடலை வீசிய கொடூரம்

ஏற்காடு : சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் கடந்த, 20ல் சந்தேகத்திற்கிடமாக கடும் துர்நாற்றத்துடன் கிடந்த சூட்கேசை, ஏற்காடு போலீசார் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருந்தது.தனிப்படை போலீசார் சூட்கேஸ் வாங்கிய கோவை கடையில் விசாரணையை துவங்கிய போது, அதை வாங்கிய நடராஜன், 32, என்பவரின் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரை போலீசார் தேடிய நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன், அவரது உறவினர் கனிவழகன் நேற்று முன்தினம் ஏற்காடு வி.ஏ.ஓ., மோகன்ராஜிடம் சரணடைந்தனர். ஏற்காடு போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெண்ணை கொன்றது உறுதியானது.போலீசார் கூறியதாவது:கொலையானது தேனி மாவட்டம், முத்துலாபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சுபலட்சுமி, 33. நடராஜனும், இவரும் கத்தாரில் பணிபுரிந்த போது ஏற்பட்ட பழக்கத்தால், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்துள்ளனர். இது குறித்து ஏற்பட்ட தகராறில், நடராஜன், சுபலட்சுமியை தாக்கியதில், அவர் இறந்தார். உடலை கனிவழகன் துணையுடன், சூட்கேசில் அடைத்து, கோவையில் இருந்து டிராவல்ஸ் காரில் ஏற்காடு எடுத்து வந்து மலைபாதையில் வீசி உள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்