உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நன்றி மறந்த இலங்கை... சும்மா விடக் கூடாது; பாடம் புகட்டணும் என்கிறார் அன்புமணி

நன்றி மறந்த இலங்கை... சும்மா விடக் கூடாது; பாடம் புகட்டணும் என்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

கைது

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்திலிருந்து வங்க்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இருமுனை தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது ஒருபுறம் கைது, இன்னொருபுறம் கடற்கொள்ளையர்களை ஏவித் தாக்குதல் என இரு முனைத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.... ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மை மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் பார்க்க வேண்டும்.

சிறை

கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 120 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 68 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை, மூன்றாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை என தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பாடம் புகட்டுக

இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த போது உதவியது இந்தியா தான். ஆனால், அந்த நன்றி கூட இல்லாமல்மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்தியாவை இலங்கை சீண்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நிரந்தத் தீர்வு

இன்னொருபுறம், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஆக 24, 2024 20:24

இந்தியா எவ்வளவுதான் நல்லது செய்தாலும், இலங்கை போன்ற நாடுகள் நம்மை முதுகில் குத்தி வேடிக்கை பார்க்கின்றன. இலங்கை போன்ற நன்றி மறந்த நாடுகளுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.


R S BALA
ஆக 24, 2024 17:18

பொதுவாக இந்திய மீனவர்கள் என்று யாரும் இருக்கின்றார்களா. ஓட்டுக்காக இண்டியா என்று சொல்லும்போது தமிழக மீனவர்கள் ஆந்திர மீனவர்கள் கேரள மீனவர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும். இந்திய மீனவர்கள் என்றே கூறுவது சரியாக இருக்கும்.


panneer selvam
ஆக 24, 2024 15:29

Anbumani ji , why his high decibel noise ? Just to please innocent Tamils . Where Indian fishermen were arrested , just answer to this question ? In Indian territorial area or Sri Lankan area ?? Please stop these dramas


செந்தில்குமார்
ஆக 25, 2024 21:42

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல் தொலைவு குறைவு என்பதால் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது என்று அவர் குறித்துள்ளார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 15:18

டாக்டர் சாஹேப் ..... ராஜபக்சேயால கௌரவிக்கப்பட்டவங்களே - அதாங்க கவிஞர் கோணி, சிதம்பர குருமா - இவர்களே பேசுறதில்ல .....


TSRSethu
ஆக 24, 2024 14:19

கச்சத்தீவை தாரை வார்த்ததால் வரும் பிரச்சனைகள் இது. இந்திய அரசு இந்த விஷயத்தில் மென்மையான போக்கை கடை பிடிப்பது சரியல்ல. அண்டை நாட்டுடன் சுமூக உறவிற்காக அது செய்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி இந்தியா பாகிஸ்தானை பிரித்தது போல இலங்கையை வடக்கும் தெற்குமாக இரண்டாக பிரித்து வட பகுதியை ஈழத்தமிழகமாக அறிவிக்க வேண்டும். கச்சத்தீவை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். சரியான ஒரே தீர்வு. இலங்கை எப்படியும் சீனவிற்கு விசுவாசமாக இருக்கப்போகிறான். எதற்கு யோசிக்க வேண்டும். மோடியிடம் உண்டா துணிவும் துடிப்பும் ??? கருணாநிதி செய்த தவறை திருத்தி எழுதுங்கள் மோடி. அண்ணாமலை அவர்களே கொஞ்சம் மத்திய அரசுக்கு புரியும்படி சொல்லுங்கள்


Shah Alam
ஆக 24, 2024 19:35

கட்சத்தீவை ஒரு மாநில அரசு யாருக்கும் தர முடியாது மத்திய அரசு மட்டுமே தர முடியும்


Kumar Kumzi
ஆக 24, 2024 20:13

அப்போ இலங்கையின் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பத்து லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்கள் சாகணுமா


தத்வமசி
ஆக 24, 2024 14:02

தமிழகத்தை விட அங்கே பொருட்கள் பல மடங்கு விலை கிடைக்கிறது என்பதால் அவற்றை கடத்திச் சென்றால் கடற்படை தடுக்கத்தான் செய்யும். கைது செய்யத்தான் செய்வார்கள். கச்சத்தீவை அள்ளி கொடுத்தவனை கேட்டிருக்க வேண்டும்.


K.SANTHANAM
ஆக 24, 2024 13:53

ஜெயலலிதா, இந்திரா காந்தி மாதிரி ஆட்சியாளர்கள் தேவை


Shekar
ஆக 24, 2024 14:15

எப்படி கட்சதீவ கொடுத்த இந்திரா காந்தி மதிரியும், தோழியின் அடாவடிக்கு பயந்து அடிமையான ஜெயலலிதா மதிரியுமா?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 24, 2024 21:53

சந்தானம் நீங்கள் சொன்ன இருவருமே சரியான ஆட்சியளர்கள் இல்லை, இருவரும் செய்த மாபெரும் தவறுகள் ஏராளம். பங்களாதேஷ் போரில் பாக்கிஸ்தான் தோற்றபோது எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான பாக்கிஸ்தான் வீரர்களை விடுதலை செய்தார். அந்த சமயம், பல இந்திய வீரர்கள் பாக்கிஸ்தான் சிறையில் இருந்தார்கள். பாக்கிஸ்தான், காஷ்மீர் விட்டு வெளியே சென்றால் தான் பாகிஸ்தானிய வீரர்களை விடுவிப்பேன் என்று முடிவு எடுத்து இருந்தால் காஷ்மீர் பிரச்னை அன்றே தீர்ந்து இருக்கும். கச்சத்தீவை எந்த ஒரு விவாதமும் பாராளுமன்றத்தில் நடத்தாமல் எதேச்சதிகாரமாக, அமெரிக்காவை தையிரியமாக எதிர்க்காமல் , இந்திரா கான் எடுத்த முடிவு. வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். இந்திரா ஒரு இரும்பு பெண் என்பதும் மோகன்தாஸ் காந்தி ஒரு மஹாத்த்மா என்பதும் கான் காங்கிரெஸ்க்காரர்களால் அவர்களது மீடியா அடிமைகளால் உருவாக்கப்பட்ட மாபெரும் பொய்.


கோவிந்தராசு
ஆக 24, 2024 13:36

நீங்க சொல்வது சரி அதற்கு திறமையான அரசுகள் வேண்டும் இப்ப அது இல்லை


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 13:31

எப்படிப்பட்ட பாடம் புகட்ட போறீங்க , இலங்கைக்கு குடியேற்றம் செய்யுங்க , அதனை விட பெரிய தண்டனை அவர்களுக்கு இருக்க முடியாது


அன்பு
ஆக 24, 2024 15:46

உதை இலங்கைக்கு முதலமைச்சர் ஆனால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.


Indian
ஆக 24, 2024 13:28

இலங்கையை விடுங்க , கூட பிறந்தவனே , நன்றி இல்லாமல் இருக்கிறான் ??


சமீபத்திய செய்தி