உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சை திருடிச் சென்ற கும்பல்

அரசு பஸ்சை திருடிச் சென்ற கும்பல்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரியசோலை என்ற இடத்தில் நிறுத்தியிருந்த அரசு பஸ்சை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு, அரசு பஸ் சென்றுள்ளது. இரவு 9 மணிக்கு பஸ்சை வழக்கமாக இரவில் நிறுத்தும் கரியசோலை பேருந்து நிறுத்தத்தில், நிறுத்தி விட்டு உறங்கச் சென்ற பஸ் டிரைவர் பிரசன்னகுமார், கண்டக்டர் நாகேந்திரன் ஆகியோர் கலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது பஸ்ஸை காணவில்லை.அருகில் தேடிப் பார்த்தபோது சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, தேவாலா செல்லும் சாலையில் டான்டீ சரக எண் 5 க்குட்பட்ட பகுதியில், சாலையில் நிறுத்தி சென்றுள்ளனர். பஸ்சை ஒட்டி ஒரு இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நடு இரவில் அரசு பஸ்சை திருடி சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

HoneyBee
ஆக 31, 2024 18:31

அங்கன போன பொறவு பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு.. டயர்கள் காத்து பூடுச்சி.. ஆக்ஸிலேட்டர் ஆறி போச்சு.. அதான் விட்டு விட்டு போயிட்டாக


Jysenn
ஆக 31, 2024 12:07

This is not bus theft but scrape theft.


sankaranarayanan
ஆக 31, 2024 08:44

எதெது போகிற போக்கைப்பார்த்தால் ஆட்டை திருடி மாட்டை திருடி மனுஷனைத்திருடி இப்போது பஸ்ஸையே திருடும்வரை நாடு நன்றாகவே முன்னேறியுள்ளதே சபாஷ் அரசுக்கும் சன்மானம் கொடுக்கலாமே


raja
ஆக 31, 2024 07:30

திரூட்டுடா, கொலைடா, கொள்ளை டா இதுதாண்டா திராவிட மாடல்டா, தமிழனுக்கு விடியல்டா...


முக்கிய வீடியோ