அரசு வேலை தர வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறை கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் விழாவில், மின்சாரம் தாக்கி, நான்கு பேர் இறந்துள்ளனர். மின் வாரியமும், காவல் துறையும், முன்னெச்சரிக்கையாக இருந்து, விபத்தை தடுத்திருக்க வேண்டும். இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்.வாசன்,தலைவர், த.மா.கா.,