| ADDED : மே 16, 2024 08:01 PM
குளித்தலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணி பெண் தூய்மை பணியாளர் தனது வீட்டுக்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை மற்றும் இடுப்பில் வெட்டினார். போலீசார் வருவதைப் பார்த்து தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். தம்பதி இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா, அழகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 53. கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி வயது 45 .இவர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஒப்பந்த பணி பெண் தூய்மை பணியாளராக பணியில் இருந்து வந்தார்.தொட்டியம் அடுத்த மேல கார்த்திகைப்பட்டி சேர்ந்த தனது தம்பி ரமேஷ் என்பவருக்கு கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.தனது தம்பிக்கு மருத்துவ சிகிச்சை உதவிக்காக தானும் உடனிருந்து பார்த்துக்கொண்டார்.பின்னர் மருத்துவ மனையில் இருந்து ரீசார்ஜ் செய்யப்பட்டு தனது தாயார் வீட்டில் தம்பியை பராமரித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக தனது வீட்டுக்கு வராததால் கணவர் கோபத்தில் இருந்து வந்தார்.இந்நிலையில் மாலை 5 மணி அளவில் திலகவதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் குளித்தலை சுங்க கேட்டில் வந்து இறங்கினார்.அருகில் உள்ள பழக்கடையில் பழங்கள் வாங்கும் போது அங்கு வந்த கணவர் பெருமாள் மனைவியிடம் தகராறு ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை மற்றும் இடுப்பில் வெட்டியதில் ரத்தம் அதிக அளவு வெளியேறியது.உயிருக்கு பயந்து திலகவதி பழக்கடைக்குள் புகுந்து கொண்டார்.அங்கு வாகன சோதனை ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசாரை பார்த்தவுடன் பெருமாள் தன் கையில் வைத்திருந்த அருவாளால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார்தம்பதி இருவருக்கும் ரத்தம் அதிக அளவு வெளியேறுவதை பார்த்த போலீசார் இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு செய்து விசாரணை செய்து வருகிறார்.