உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்: 2 மணி நேரம் சேஸ் செய்து பிடித்த போலீசார்

கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்: 2 மணி நேரம் சேஸ் செய்து பிடித்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி கோழி பண்ணையில் பதுங்கியிருந்து, மாடு திருடிய வடமாநில கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தில், பாழடைந்த கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சில நாட்களாக நோட்டம்விட்ட போலீசார், கைது செய்ய முடிவு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wuyd0nu7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார், கோழிப்பண்ணையை சுற்றி வளைத்தனர்.போலீசார் வருவதை அறிந்த வடமாநில கொள்ளையர்கள், கர்நாடகா மாநில பதிவு எண் உடைய, 'பொலீரோ பிக் அப்' சரக்கு வாகனத்தில் தப்ப முயன்றனர். அவர்களை கோழிப்பண்ணை நுழைவாயிலில் வழிமறித்த போலீசார் மீது, வாகனத்தை ஏற்றியும் கொல்ல முயன்றனர்; அதற்குள் போலீசார் சுதாரித்ததால் உயிர் தப்பினர். இதுபற்றிய தகவலறிந்த கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி, கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை கண்ணம்பாக்கம் சந்திப்பில், போலீஸ் ஜீப்பை குறுக்கே நிறுத்தி, கொள்ளையர்களின் வருகைக்காக காத்திருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கொள்ளையர்களின் வாகனம், போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளி, நிற்காமல் வலதுபுறமாக கவரைப்பேட்டையை நோக்கி பறந்தது. இதையடுத்து, எட்டுக்கும் அதிகமான போலீசார், ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களில் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். அதற்குள் கொள்ளையர்கள் சென்ற வாகனம், குருவராஜகண்டிகை தைலத்தோப்பிற்குள் புகுந்தது.பின் தொடர்ந்து சென்ற போலீசார், கொள்ளையர்கள் பதுங்கிய பகுதியில், தங்களின் வாகனங்களை நிறுத்தி, அப்பகுதி முழுதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.இந்த நேரத்தில், தைலந்தோப்பில் இருந்து வெளியேறிய கொள்ளையர்கள், பெரிய புலியூர், தேர்வாய்கண்டிகை, 'சிப்காட்' வழியாக தப்பிச்செல்ல முற்பட்டனர். அவர்களை பின் தொடர்ந்து போலீசாரும் சென்றனர்.அப்போது, சரக்கு வாகனத்தில் சென்ற கொள்ளையர்களில் மூவர், போலீசாரின் ஜீப் மீது கற்களை சரமாரியாக வீசினர்.இதற்கிடையில், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் தலைமையில் ஏராளமான போலீசார், வடமாநில கும்பலுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில், பாலவாக்கம் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தினர்.லாரி நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்த கொள்ளையர்கள், இனி தப்ப முடியாது என உணர்ந்து, தாங்கள் சென்ற வாகனத்தில் இருந்து குதித்து ஆளுக்கொரு திசையில் ஓடினர். ஏற்கனவே அங்கு கூடியிருந்த போலீசார், அவர்களை விரட்டிப் பிடித்தனர். இதன் வாயிலாக, இரண்டு மணி நேரமாக நடந்த, 'சேஸ்' முடிவுக்கு வந்தது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆசிப்கான், 37, சலீம், 32, அஸ்லாம் கான், 44, அல்டாப், 37, மற்றும் கவரைப்பேட்டை திவாகர், 25 என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:வடமாநில கொள்ளையர்கள், பாழடைந்த கோழிப்பண்ணையில் தங்கி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஆந்திர எல்லையோர பகுதிகளில், கால்நடைகள் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.திருடப்படும் மாடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி, கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்பி உள்ளனர். நான்கு மாதங்களாக, இந்த திருட்டு தொழிலை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, சரக்கு வாகனம், மாடு பிடி கயிறுகள், கத்திகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ganesun Iyer
ஜூலை 01, 2024 13:51

நல்ல படத்தை பாருங்க


ஆரூர் ரங்
ஜூலை 01, 2024 13:04

மகனும் மருமகனும் 30000 கோடி ஆட்டையை போட்ட போதும் ஒண்ணும் பண்ண முடியல. ஜுஜுபி பத்து மாடு திருடிய சிறுபான்மையினர் நாலு பேரைப் பிடிக்க இவ்வளவு பிரயத்தனம். மதப் பஞ்சாயத்து ஃபட்வா உத்தரவுபடி விடுதலை செய்யப்படுவார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:52

The meaning of the name Altaf is Kindness. சூப்பர்ல ????


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:49

ஒருவரைத் தவிர மற்றவரனைவரும் மார்க்கத்தவர்களாக இருப்பதால் "வடக்கன்ஸ் இங்கே வந்து கொள்ளையடிக்கிறாங்க" என்று எழுத முடியாத கடுப்பில் இருக்கிறார் .... அவர்கிட்ட வெச்சுக்காதீங்க ....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:59

வேணுகோப்ப்பால் .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:40

மார்க்கத்தவர்கள் மாட்டை கொண்டு போகாமல் ஹிந்து கோவில் பிரசாதத்தையா கொண்டு போவாய்ங்க .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:39

மாட்டை திருடி மூட்டை கட்டிக்கிட்டா போவாங்க ... செய்திக்கான படம் சூப்பர் ....


Saai Sundharamurthy AVK
ஜூலை 01, 2024 11:15

வட மாநிலத்தவர்கள் விஷயத்தில் அக்கறை காட்டும் ஸ்டாலின் மற்றும் அவரது காவல் துறையினர் உள்ளூர் கள்ளச்சாராயத் திருடர்கள் / கொள்ளையர்கள் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுவதில்லை.


sethu
ஜூலை 01, 2024 09:26

இதெல்லாம் நாட்டுக்கு கேடு துப்பாக்கி எதுக்கு உங்களுக்கு கொடுத்திருக்கு தெலுங்கானா ஸ்டைலில் வேலையை குடிங்க ,அப்புறம் ஜட்ஜு என்ன இவர்களை வைத்து மாடுபிடி விளையாட்டா செய்யப்போறார் பொதுமக்களை காக்கத்தான் உங்களை நியமித்துள்ளது மறக்காதீர்கள். ஹரியானா மாநிலம் என்ற வார்த்தை தவறாக உள்ளது மேற்கு வங்காளம் வங்காளிகளாக இருக்கும் உண்மையை போடுங்கள் .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 08:54

வேணுகோபல் பெயர் ஒன்றே போதும் அந்த திருடர்களின் தரம் விளங்க ஆனாலும் ரொம்பதான் முட்டு கொடுக்கறீங்க


hari
ஜூலை 01, 2024 11:48

அவர்தான் திராவிட கொத்தடிமை கான் க்ரீட் பில்லர்......


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 12:42

"மதமெனப்பிரிந்தது போதும்" ன்னு கட்டிப்பிடிக்கிற மார்க்கத்தவர்களிடம் தமிழனை கன்னுக்குட்டி போல பிடித்துக்கொண்டு போய் ஒப்படைப்பது நீங்கள் குறிப்பிட்ட திராவிடியால்ஸ் ன் பணி ....


VENKATASUBRAMANIAN
ஜூலை 01, 2024 08:30

வாழ்த்துக்கள். இதே வேகத்தை கள்ள சாரயத்தில் காட்டியிருந்தால் இவ்வளவு உயிர்களை இழந்திருக்க மாட்டோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை