உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பாஸ்போர்ட் சேவை இணையதளம், நாளை இரவு முதல் செப்டம்பர் 2 வரை இயங்காது என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம், நாளை இரவு, 8:00 மணி முதல் செப்டம்பர், 2 காலை, 6:00 மணி வரை இயங்காது. இதன் காரணமாக, வரும், 30ல் திட்டமிடப்பட்டிருந்த, அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்று சந்திப்புக்காக உறுதி அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வழியே தகவல் தெரிவிக்கப்படும். மேலும், 30ம் தேதி சென்னை அண்ணா சாலையில், ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வேலுச்சாமி
ஆக 28, 2024 09:53

ஐயய்யோ... எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சு நாலே நாளில் ப்ளேன் ஏறணுமே. பாஸ்போர்ட்டுக்காக வெயிட்டிங்ல இருக்கேனே...


Kasimani Baskaran
ஆக 28, 2024 05:23

ஐடி துறையில் கொட்டை போட்ட இந்தியாவால் இதைக்கூட ஒழுங்காக செயல்படுத்த முடியாதா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை