உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53 ஆயிரத்தை தாண்டியது!

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் கிடுகிடு உயர்வை சந்தித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர்.இந்நிலையில் இன்று (ஏப்.,08) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து, ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
ஏப் 09, 2024 07:55

தங்கம் விலை உயர்வு விண்ணை முட்டும் நிலையை பார்த்தால் பெண் குழந்தை வைத்திருப்போர் நிலை என்ன


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை