உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடையை குளிர்வித்த மழை

கொடையை குளிர்வித்த மழை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதியில் நேற்று ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் நீடித்து கொடைக்கானல் மலைப்பகுதியில் வறட்சி நிலவியது. நீர்நிலை, அருவிகள் வற்றின. மலைப்பிரதேசங்களிலே வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து இரவு நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டது. மின்விசிறி பயன்படுத்தும் நிலைக்கு மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் இருந்தே கொடைக்கானலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு பின் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. வில்பட்டி, பெருமாள்மலை, வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இம்மழை பெய்தது. தாண்டிக்குடி கீழ் மலை பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கோடையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழை பெய்தது மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை