உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி ஆட்சி வேணும்; அதிகார பகிர்வு தான் ஜனநாயகம்; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்

கூட்டணி ஆட்சி வேணும்; அதிகார பகிர்வு தான் ஜனநாயகம்; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்

திருச்சி: ''அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்பு நிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள்,'' என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மற்றும் மரக்காணத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு 10 லட்சம் கொடுத்ததில், என்னால் பூ, பொட்டு வாங்க முடியுமா என கேட்கின்றனர். கள்ளச்சாராத்தால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் எல்லாம் மதுவிற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 100 சதவீதம் நல்ல நோக்கத்தோடு மாநாட்டை நடத்துகிறோம்.

அரசியல் இல்லை

எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும் சொல்கிறேன். திட்டமிட்டு எந்த காயும் நகர்த்தவில்லை. மாநாட்டை அரசியலுடன் இணைத்து திரித்து பேசுகிறார்கள். மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு தி.மு.க.,வும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 1977ம் ஆண்டில் இருந்து மத்தியிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் ஒரு பகிர்வு தருகிறார்கள். அதுபோல தமிழகத்திலும் ஒன்று நடப்பது தவறு அல்ல. கோரிக்கை எழுப்புவதும் தவறு அல்ல.

ஜனநாயகம்

2016ம் ஆண்டு, இந்த கோரிக்கைகளை மையப்படுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று ஒரு கருத்தரங்கம் நடத்தி, ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்பு நிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் உணர்ந்தால் போதும்!

'நாங்க எல்.கே.ஜி.,படிப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.எல்.கே.ஜி., படித்தாலும் சரி, எங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் போதும்' என திருமாவளவன் பதிலடி கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sridhar
செப் 15, 2024 21:25

பிளாஸ்டிக் chair கூட கிடையாது போ.


theruvasagan
செப் 15, 2024 20:37

இதையெல்லாம் தேர்தலுக்கு கூட்டணி வைக்கும்போது நிபந்தனையாக வைக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அப்போது பார்த்து பெரிய பெட்டி ஒன்று நடுவில் வந்து தொலைத்து பேசவிடாமல் செய்து விடுகிறதே. என்ன செய்வது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 19:36

நியாயமான கருத்து ..... ஆனால் ஆட்சி அமைத்து மூன்று வருடங்கள் கழிந்த பிறகு கேட்கும் காரணம் என்ன ????


அப்பாவி
செப் 15, 2024 18:36

ஆட்டை பரவலாக்கப் படணும். புரியுது கோவாலு.


Ramani Venkatraman
செப் 15, 2024 18:30

இதைத்தானே காங் தலைவரும் "சொத்துக்களை பிடுங்கி பங்கு போடுவோம்"னு சொன்னாரு... அதிகாரம் கூட்டாக இருந்தால் ஒருவர் கை மட்டும் ஓங்குதல் இருக்காதல்லவா...இவர் சொல்வதுதான் சரி.....


Sudha
செப் 15, 2024 18:08

மாப்பு வச்சுட்டாங்க ஆப்பு


Sivagiri
செப் 15, 2024 17:32

அண்ணனுக்கு , இப்பதான் கூட்டாட்சி , ஜனநாயகம்னா என்னான்னு புரிஞ்சிருக்கு போல - ஆனா , தனி கட்சி கொடி , தனி நிதி , தனி நிதி , தனி தொகுதி , எல்லாம் வச்சிக்கிட்டு , எப்படி கூட்டாட்சி ? . . டீலிங் சுமாரா இருக்கு ? , தனியா நின்னு எவ்வளவு பவர் இருக்குன்னு நிரூபிச்சா ?


ramesh
செப் 15, 2024 17:26

நான் dmk ஆதரவாளர் என்றாலும் இந்து மதத்திற்கு எதிரானவர் என்பதால் இவர் தோற்க வேண்டும் என்று நினைத்தேன் .ஆனால் வெற்றி பெற்று விட்டார் .என்னை பொறுத்தவரையில் இவர் கூட்டணியில் இருந்து வெளியேறி pmk உள்ளே கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்


sridhar
செப் 15, 2024 21:26

என்னது , dmk ஆதரவாளர் , ஆனால் ஹிந்து விரோதிகள் தோற்கணுமா …என்ன சார் குழப்பறீங்க .


Ms Mahadevan Mahadevan
செப் 15, 2024 17:00

ஆட்சி அதிகாரத்தில் பங்கு. சரி. எல்லா கட்சிகளும் தனித்தனியா நின்னு தேர்தலை சந்திக்கணும். 18 சதவித்திற்கு அதிகம் வாங்கின கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கட்டும். அதை விட்டுவிட்டு திமுக ஓட்டை/ அதிமுக ஓட்டை வாங்கிவிட்டு ஆட்சில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பது சரி இல்லை. 18 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை கலை க வேண்டும். ஒக்கேயா ?


karupanasamy
செப் 15, 2024 16:56

கேக்குறவன் கேனயனா இருந்தா,உனக்கு தன்மானம் இருக்குன்னு சொல்லுவான்.


முக்கிய வீடியோ