உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி

சென்னை: 'புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ml11zcbh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Matt P
மார் 01, 2025 05:24

மும்மொழி கொள்கை என்று வந்தால் தமிழ் இங்கிலீஷுக்கு அடுத்ததாக இந்தி தான் தமிழ் நாட்டில் முன்னிலை பெறும் என்பதில் ஐயமில்லை. மலயாளமோ தெலுங்கோ கன்னடமோ என்றால் அந்த மாநிலத்துக்கு போன பின் சமாளித்து கொள்வர். மக்கள் இந்தியை தேர்ந்தெடுப்பார்களால் என்றால் அவர்கள் விருப்பம். மக்கள் விருப்பத்துக்கு தடை போடுவது சர்வாதிகாரம். மூன்றாவது மொழியை உயர்நிலைப்பள்ளிகளில் தான் படிப்பார்களாக இருக்கும். மூன்றாவது மொழியை முழுக்க மாணவர்கள் தெரிந்து கொள்ள போவதில்லை. அடிப்படை அறிவு அனுபவம் பெற கை கொடுக்கும். என்றைக்கோ என்க ஐயா சொன்னார் அண்ணா சொன்னார் அப்பன் கூட சொன்னஆர் என்பதெல்லாம் அரைவேக்காட்டுத்தானம் தமிழஎ அதிக அளவு இங்கிலீஷு கலந்து பேசும் அளவுக்கு வந்து விட்டது. இன்னொரு மொழி வந்தால் இங்கிலீஷிலிருந்து தமிழ் காப்பாற்றப்படலாம். இங்கிலீஷு கற்று கொள்வதற்கும் தடை இருக்காது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தேவை.


Oviya Vijay
பிப் 28, 2025 22:41

Vivek, Guna, Dharmavan, Kumar போன்ற ஒரு சில பைத்தியக்காரர்கள் அவர்கள் தலையில் களிமண் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். தங்கள் சொந்த கருத்துகளை எழுதாமல் மற்றவர்கள் கருத்துக்களின் மீது மட்டும் தங்களுடைய வன்மத்தைக் காட்டி நொடிக்கொரு முறை தாங்கள் ஒரு மட சாம்பிராணி என்பதை இங்கே நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். சுயமாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மற்றவர் கருத்துக்கள் மீது உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை விடுத்து உங்கள் சொந்தக் கருத்தை பதிவிடுங்கள்.


Oviya Vijay
பிப் 28, 2025 19:02

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி இறைவி Sir... எனக்காக நீங்கள் சிரமேற்கொண்டு உங்கள் நேரம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு மிக மிக நன்றி...


vivek
பிப் 28, 2025 20:36

ஏதோ புரிந்தால் சரி...நாளை மறுபடியும் சொம்பு தூக்காமல் இருந்தால் பாராட்டலாம்...


Iraivi
பிப் 28, 2025 17:33

தமிழ் நாட்டில் முப்பது முதல் நாற்பது விழுக்காடு மக்கள் தொகை தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள். அதாவது, சென்னை, ஓசூர், கோவை, கிருஷ்ணகிரி மற்றும் வட மாநில எல்லையோர மாவட்டங்களிலும், மேலும் செட்டியார், நாயுடு போன்ற மாநிலம் முழுதும் பரவி வாழும் சமூகத்தினர்களும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். அது போன்றே ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் மாநிலம் முழுதும் காலம் காலமாக பரவி வாழும் ராவ், ராயர்கள், கௌடர் போன்ற சமூகத்தினர் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள். மலையாளிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுதும் பரவியுள்ளார்கள். இவர்கள் அன்றி தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பரவலாக குஜராத்தியர்களும், மராட்டியர்களும், சென்னை, மற்றும் தமிழக பெரு நகரங்களில் பஞ்சபியினர், வங்காளிகள், ராஜஸ்தானியர்கள், பீகாரிகள் போன்ற இந்தியாவின் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வீட்டில் அவர்களின் தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழியில் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருப்பதில் பெரும் வருத்தம். இது போன்றே இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினர் முழுமையான தாய் மொழி கற்காதது பெரும் வருத்தமாக உள்ளது. புதிய மொழி கொள்கைப்படி முதல் மொழியாக அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியில் படிப்பார்கள். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பார்கள். மூன்றாவது மொழியாக அவர்களின் தாய் மொழியில் எழுதவும் பேசவும் கற்பார்கள். இடம் மாறி வாழ்க்கை வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழி கற்ற திருப்தி ஏற்படும். இப்போது மும்மொழி கொள்கைப்படி மொழி ஆசிரியர்கள் தேவை பற்றி. எந்த ஒரு பள்ளியிலும் மூன்றாவது மொழி தேவை பற்றி கணக்கிடும்போது பத்து மாணவர்களுக்கு மேல் குறிப்பிட்ட மொழி விரும்பும் மாணவர்கள் இருந்தால் அம்மொழிக்கு தனி ஆசிரியர்களை அமர்த்தலாம். ஆரம்ப வருடங்களில் அம்மொழி ஆசிரியர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் வெவ்வேறு வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும்போது அவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மொழி ஆசிரியர்கள் எட்டாவது வரை பிற பாடங்கள் நடத்துவதும் பிரச்சனை இல்லை. அது மட்டுமில்லாமல் நான்கு ஐந்து பள்ளிகளுக்கு வேலை பளுவிற்கு ஏற்ப ஒரு மொழி ஆசிரியரை நியமிக்கலாம். அவர் வாரம் ஒரு முறை ஒரு நாள் ஒரு பள்ளிக்கு சென்று ஆறு, ஏழு, எட்டு என்று பல வகுப்புகளுக்கும் பாடம் எடுக்கலாம். அடுத்த கேள்வி. முமொழியினால் மாணவர்களின் கற்கும் பளு கூடும் என்பது. ஐந்து முதல் பதினைந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது மிகக் சுலபமான ஒன்று என்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளார்கள். மேலும் பல மொழிகள் கற்கும் குழந்தைகளுக்கு மற்ற பாடங்களை கற்கும் அறிவுத் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடகத்தின் மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற நகரங்களில் இருக்கும் குழந்தைகள் மிக இயல்பாக கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, துளு, கொங்கணி என்று பன்மொழி வித்தகர்களாக இருப்பார்கள். சிலர் மராத்தி கூட இயல்பாக பேசுவார்கள். அவர்கள் திறன் குறைந்து விட்டதா? மூன்று மொழியினால் மேலும் பல பயன்கள் உள்ளன. முதலில் நிறைய தமிழாசிரியர்ககளுக்கு வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். அடுத்ததாக தமிழக அரச பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியினால் பள்ளி ஆசிரியர்களின் தரம், கல்வித் தரம், பள்ளி கட்டமைப்பு தரம் இவைகள் உயரும். இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பலன் பலம் என்று கூட சொல்லலாம் ஒன்று உண்டு. அதை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக தெரிவித்ததில்லை. பிஜெபிக்கு அதன் பலன் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் அதையே எதிர்கட்சிகள் எதிர்மறையாக மடை மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சிகளுக்கும் அந்த பலன் தெரியும். ஆனால் அதை ஆதரித்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. அவர்களின் பிரித்து வைத்து ஆள்வது என்பது எடுபடாமல் போய்விடும். அந்த முக்கியமான காரணி, பல மாநில மக்கள் பல மொழிகளை கற்கும் போது தேசிய ஒருமைப்பாடு வளரும். இந்த தேசிய ஒருமைப்பாடு என்றாலே பல பிராந்திய கட்சிகளுக்கு அலர்ஜி / வெறுப்பு. இதே காரணத்தினால்தான் அக்னிபபாத் திட்டம் இவர்களால் எதிர்க்கபடுகிறது. ஏனென்றால் அக்னிபபாத் திட்டத்தில் இணையும் ஒரு இளைஞன் நான்கு வருடம் கழித்து வெளிவரும்போது ஒரு சராசரி இந்தியனைவிட பன்மடங்கு நாட்டுப் பற்று உள்ளவனாக இருப்பான். இந்திய வாக்காளர்கள் பன்மொழியும் கற்று நாட்டுப்பற்று உள்ளவர்களாக ஆகிவிட்டால் பல அரசியல் கட்சிகள் அவர்கள் கொள்கைகளை மொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தான் இவர்கள் அம்மாதிரி தேசத்தை ஒன்று படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர விரும்புவதில்லை. இப்போது தேவை வெளிப்படையான மனதும் நாட்டின் வளர்ச்சியும்தான். இவர்கள் சொல்வதை பொது மக்கள் யாரும் கேட்டுக் கொள்ளும்முன் உங்கள் ஊரில் இருக்கும் ஒரு ராணுவ வீரனையோ அல்லது வட இந்தியாவிலோ வேறு மாநிலத்திலோ பணி மாற்றம் பெற்று பணி செய்து வந்தவர்களையோ, அங்கு தொழில் செய்பவர்களையோ கேட்டுப் பாருங்கள். பன்மொழி அவசியத்தை அவர்கள் கூறுவார்கள்.


vivek
பிப் 28, 2025 16:01

ஓவியர் ஓட்டமாக ஓடிவிட்டார்...மதத்தின் பேரை சொல்லி இப்போ கருத்துத் போடுவார்


venugopal s
பிப் 28, 2025 15:20

ஆளுநர் ரவி அவர்கள் பீகாரில் கல்வி பயின்றவர் ஆயிற்றே, இவருக்கு ஹிந்தி,ஆங்கிலம் தவிர மூன்றாவதாக எந்த மொழி படித்துள்ளார் அல்லது விருப்பப்பட்டு கற்றுள்ளார் என்று சொல்ல முடியுமா? இவர் மூன்றாவது மொழி படிக்க மாட்டாராம்,தமிழக மக்கள் எல்லோரும் மூன்று மொழிகள் படிக்க வேண்டுமாம்,நல்லா இருக்கு உங்க நியாயம்!


guna
பிப் 28, 2025 17:26

ஆளுநர் உனக்காக சொல்லவில்லை...தமிழக மக்களுகுகா சொல்லுகிறார்....நீ ஓரமா போய் விளையாடு


Matt P
மார் 01, 2025 05:11

அவர் படிக்கும்போது முன்றாம் மொழி படிக்க வாய்ப்பிருந்தால் அவர் படித்திருக்கலாம். இப்போது தமிழ் கற்று கொண்டிருக்கிறார் என்பது செய்தி.


இறைவி
பிப் 28, 2025 15:08

ஓவியா விஜய்க்காக பதில். தமிழ் நாட்டில் முப்பது முதல் நாற்பது விழுக்காடு மக்கள் தொகை தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள். அதாவது, சென்னை, ஓசூர், கோவை, கிருஷ்ணகிரி மற்றும் வட மாநில எல்லையோர மாவட்டங்களிலும், மேலும் செட்டியார், நாயுடு போன்ற மாநிலம் முழுதும் பரவி வாழும் மக்கள் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். அது போன்றே ஓசூர், நீலகிரி மற்றும் மாநிலம் முழுதும் காலம் காலமாக பரவி வாழும் ராவ், ராயர்கள் போன்ற சமூகத்தினர் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள். மலையாளிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுதும் பரவியுள்ளார்கள். இவர்கள் அன்றி தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பரவலாக குஜராத்தியர்களும், மராட்டியர்களும், சென்னை, மற்றும் தமிழக பெரு நகரங்களில் வாழும் பஞ்சபியினர், வங்காளிகள் போன்ற இந்தியாவின் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வீட்டில் அவர்களின் தாய் மொழியை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழியில் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருப்பதில் பெரும் வருத்தம். இது போன்றே இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினர் முழுமையான தாய் மொழி கற்காதது பெரும் வருத்தமாக உள்ளது. இந்த மொழி கொள்கைப்படி முதல் மொழியாக அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியில் படிப்பார்கள். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பார்கள். மூன்றாவது மொழியாக அவர்களின் தாய் மொழியில் எழுதவும் பேசவும் கற்பார்கள். இடம் மாறி வாழ்க்கை வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழி கற்ற திருப்தி ஏற்படும். இப்போது மும்மொழி கொள்கைப்படி மொழி ஆசிரியர்கள் தேவை பற்றி. எந்த ஒரு பள்ளியிலும் மூன்றாவது மொழி தேவை பற்றி கணக்கிடும்போது பத்து மாணவர்களுக்கு மேல் இருந்தால் அம்மொழிக்கு தனி ஆசிரியர்களை அமர்த்தலாம். ஆரம்ப வருடங்களில் அம்மொழி ஆசிரியர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் பல வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும்போது அவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மொழி ஆசிரியர்கள் எட்டாவது வரை பிற பாடங்கள் நடத்துவதும் பிரச்சனை இல்லை. அது மட்டுமில்லாமல் நான்கு ஐந்து பள்ளிகளுக்கு வேலை பளுவிற்கு ஏற்ப ஒரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர் வாரம் ஒரு முறை ஒரு பள்ளிக்கு சென்று பல வகுப்புகளுக்கும் பாடம் எடுக்கலாம். மூன்று மொழியினால் மேலும் ஒரு பெரிய பலன் உண்டு. நிறைய தமிழாசிரியர்ககளுக்கு வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். இவை எல்லாவற்றையும் மிகப்பெரிய பலன் ஒன்று உண்டு. அதை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக தெரிவித்ததில்லை. பிஜெபிக்கு அதன் பலன் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் அதையே எதிர்கட்சிகள் எதிர்மறையாக மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சிகளுக்கும் அந்த பலன் தெரியும். ஆனால் அதை ஆதரித்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. அவர்களின் பிரித்து வைத்து ஆள்வது என்பது எடுபடாமல் போய்விடும். அந்த முக்கியமான காரணி, பல மாநில மக்கள் பல மொழிகளை கற்கும் போது தேசிய ஒருமைப்பாடு வளரும். இந்த தேசிய ஒருமைப்பாடு பல பிராந்திய கட்சிகளுக்கு அலர்ஜி. இதே காரணத்தினால்தான் அக்னிபபாத் திட்டம் இவர்களால் எதிர்க்கபடுகிறது. இப்போது தேவை வெளிப்படையான மனதும் நாட்டின் வளர்ச்சியும்தான்.


Oviya Vijay
பிப் 28, 2025 17:02

நன்றி இறைவி Sir... எனக்காக சிரமேற்கொண்டு உங்களின் நேரம் ஒதுக்கி விளக்கம் அளித்தமைக்கு... மிக்க நன்றி...


kantharvan
பிப் 28, 2025 17:09

ஆங்கிலம் படித்தால் அதிக ஆய்வு தாள்களை கற்கலாம் ஹிந்தி கற்றால் மயில் கண்ணால் கருவுறும் ??? பசுமாடு பிராணவாயுவை வெளியிடும்???? கோமியம் குடித்தால் புற்று நோய் தீரும்?? மாதிரியான அறிவியல்தான் மக்களுக்கு வரும். இறைவி எங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்று அறிஞர்கள் ஆகட்டும் அதுவே எங்களுக்கு போதும்?? உங்கள் பிள்ளைகள் ஹிந்தியை கற்று சங் நிதி மந்திரி ஆகுங்கள் யார் தடுத்தது??


jairam nagarajan
பிப் 28, 2025 13:22

நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள், மூன்று மொழிக் கொள்கைக்கு அல்ல, உங்கள் அரசாங்கம் இந்தி கட்டாயம் கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதை உங்களால் நிறுத்த முடிந்தால், நாங்கள் மூன்று மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம்


Oviya Vijay
பிப் 28, 2025 13:18

ரெண்டு நாளா நான் ஒரு கேள்வி கேட்டு கதறிக்கிட்டு இருக்கேன்... அதுக்கு ஒரு பயலும் ஒழுங்கா பதில் சொல்லத் தெரியல...


vivek
பிப் 28, 2025 14:32

தமிழ்ல மாணவர்கள் தோல்வி அடைவது ஏன்....பதில் இல்லயே


ஆரூர் ரங்
பிப் 28, 2025 15:04

ஒரே கேள்வி . உங்க தானைத் தலைவர் அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை கட்சியினர் நடத்தும் பள்ளிகளிலேயே அமல்படுத்தாமல் மத்திய அரசின்CBSC பாடத்திட்டத் தை பின்பற்றுவதேன்? முதல்வரின் சொந்தக் குடும்பப் பள்ளிகளே ஏற்காத சமசசீர் திட்டத்தை சாமானிய வீட்டுப் பிள்ளைகளின் மீது திணிப்பது நியாயமா? ஒரே ஒரு மாணவருக்காக கூட பல அரசு பள்ளிகள் இயங்கும் போது, ஒரு சில மாணவர்களுக்காக மொழிப் பாட ஆசிரியர்களை நியமிப்பதில் தவறில்லை


Matt P
மார் 01, 2025 05:36

உங்க வயசுக்கு இங்க எல்லோரும் பயலுக தான் போலிருக்கு.


நாஞ்சில் நாடோடி
பிப் 28, 2025 13:04

மும்மொழி கொள்கையில் தமிழக அரசின் இறுமாப்பு நிலைப்பாடு பற்றி இண்டி கூட்டணி ராகுலன் ஒன்றுமே சொல்லவில்லை. ஏனெனில் அவரவர் மாநிலங்களில் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை அடிப்பதற்கு வசதியாக கொள்கைகளில் மாற்றம் செய்து கொள்வார்கள் இந்தி கூட்டணியினர் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை