உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: எச்.ராஜா

தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: எச்.ராஜா

கோவை: “தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,” என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு, கோவை மாவட்ட பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி:

டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 1993ல், 43 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. தற்போது அது, 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இம்மாற்றத்திற்கு, பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களிடம் சென்றது மட்டுமல்ல; ஆம் ஆத்மியின் ஊழலும் காரணம்.இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்; இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஈரோட்டில் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை, நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இது, வரும் 2026ல் எதிரொலிக்கும்.மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6,680 கோடி ரூபாயும், பல்வேறு உள்கட்டமைப்புக்காக, 14,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் இதை மறைத்துவிட்டு, மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் தல விருட்சத்தை மீட்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். மருதமலையில், ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என, தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது.தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் ஏ.டி.ஜி.பி.,யாக இருக்கும் கல்பனா நாயக்கே, தன் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இதற்காக வெட்கப்பட வேண்டாமா?இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sampath Kumar
பிப் 09, 2025 11:48

இதை போய் உன் பூர்விக பிஹாரில் சொல்லி பாரு பார்க்கலாம் முடியுமா ?


பாமரன்
பிப் 09, 2025 09:58

அது சரி பெண்களுக்கு பாதுகாப்பில்லன்னு சொல்லிட்டு இவரே ரெண்டு பக்கமும் பெண்களை நிக்க வச்சிருக்காரே... ம்ம்ம்ம்


guna
பிப் 09, 2025 16:43

பாவம் தாய், தங்கைகளுடன் பிறக்கவில்லை போல...அதுதான் உன் திராவிட புத்தி


நிக்கோல்தாம்சன்
பிப் 09, 2025 08:51

இதற்கு காரணம் 90 சதவீத தமிழக ஊடகவியலாளர்களும் சோரம் போனது தான் காரணம் , அந்த 10 சதவீத ஊடகவியலாளர்களை தலைவணங்குகிறேன்


N.Purushothaman
பிப் 09, 2025 08:22

திருட்டு திராவிடன் பெண் பித்தர்கள்தானே ....வேறெப்பிடி இருக்கும் ? ...


கிஜன்
பிப் 09, 2025 08:12

கூடாரத்திற்குள் ஒட்டகம் புகுந்த கதை நன்றாக இருந்தது ..... எம் தமிழ்க்கடவுள் முருகனின் படை வீடுகளை காப்போம் .... ஓம் முருகா ....


sridhar
பிப் 09, 2025 08:08

இல்லையே . திக , திமுக பெண்கள் சந்தோஷமாக சுற்றி வருகிறார்களே .


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2025 07:46

பாஜகவினர் திமுகவின் பொய்யை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஊடகங்களின் வாயிலாக பொய்யை பரப்பி வருகின்றனர்.


T.sthivinayagam
பிப் 09, 2025 07:37

கோவில் பணியாளர்களுக்காக மட்டுமே பேசும் திரு ராஜா ஐயா அவர்கள் பெண்கள் பற்றி பேசுவதற்க்கு வரப்போற தேர்தல் தான் காரணமா என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்


கந்தண்
பிப் 09, 2025 07:24

அதன .1000 ம் வாங்கும் மானிக்கள். ஏதாவது. ஒண்ணு சொல்லு மா?


Kasimani Baskaran
பிப் 09, 2025 07:24

திராவிட மதக்கோட்ப்பாட்டின் படி ஆணாதிக்கம் மிக முக்கியமானது. உதாரணத்துக்கு ராமசாமி நாயக்கர் தேனிலவுக்கு போன பொழுது கூட தனது பெண் துணைவிக்கு ஒரு செருப்பு கூட அணிவிக்கவில்லை. அவர்களைப்பொறுத்தமட்டில் பகுத்தறிவு மற்றவர்களுக்கு மட்டுமே.


புதிய வீடியோ