உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!

நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!

எங்கள் சங்கத்தில், 80 வயதை கடந்த நீதிபதிகளும் உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றால், அதற்கான செலவை அரசிடம் இருந்து பெறலாம். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள், 10 பேரின் மருத்துவ செலவை விடுவிக்க கோரி விண்ணப்பித்துள்ளோம். ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவ செலவை அரசு வழங்காமல் உள்ளது.உயர் நீதிமன்றம் வாயிலாகவும், அரசுக்கு நினைவுப்படுத்தி விட்டோம். முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை.மருத்துவ செலவை விடுவிக்க கோரி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்ந்து விட்டோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா அல்லது உண்ணாவிரதம் இருக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். நீதி வழங்கியவர்களுக்கே நீதி இல்லை என்பது வேதனை. -- கே.ராமசாமி துணை தலைவர்,தமிழ்நாடு ஓய்வு பெற்ற நீதிபதிகள் நலச்சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ethiraj
செப் 11, 2024 07:14

State is becoming insolvent. Taking loans running into several thousand crores Freebies and subsides to attract voters to vote for ruling party Almost 30 % budget spent on freebies and subsidies Finance is wasted on luxuries and aevertisment


R.RAMACHANDRAN
செப் 09, 2024 07:40

ஆளுக்கு தகுந்தாற் போல நீதி அளிக்கும் வெகுமதிக்களுக்கு தகுந்தாற் போல நீதி அளித்த/அளிக்கும் இவர்கள் பாதிக்கப்பட்டால் கூக்குரல் இடுகிறார்கள்.அவரவர்கள் செய்த/செய்கின்ற வினைகளுக்கு தகுந்த பலன்களை இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ அனுபவித்ததாக வேண்டும். இப்பிறவியிலேயே அனுபவித்துவிட்டால் மறு பிறவி இருக்காது.


புதிய வீடியோ