உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜபாளையத்தில் இரண்டு விபத்துக்களில் மூவர் பலி பெண்கள் உட்பட நால்வர் காயம்

ராஜபாளையத்தில் இரண்டு விபத்துக்களில் மூவர் பலி பெண்கள் உட்பட நால்வர் காயம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாயினர்.ராஜபாளையம் நேதாஜிநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் 24, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார். அண்ணாநகரைச் சேர்ந்த மாரிமுத்து 30, ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.நண்பர்களான இருவரும் நெல் கட்டும் செவல் பூலித்தேவன் குருபூஜைக்கு டூவீலரில் சென்று திரும்பும் போது சோலைசேரி அருகே சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று திரும்பிய வேன் டயர் வெடித்து நிலை தடுமாறி மோதியதில் இருவரும் (ஹெல்மெட் அணியவில்லை) சம்பவயிடத்தில் பலியாயினர். அவர்களது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. கரிவலம் வந்த நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 40, சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவரது உறவினர்கள் பரமாத்மா 60, பழனியம்மாள் 52, கோகிலா 40, முத்துப்பாண்டியன் 37, ஆகியோருடன் சங்கரன்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று நேற்று முன்தினம் நள்ளிரவு ஊர் திரும்பினார். முதுகுடி அருகே எதிரே வந்த கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் சம்பவயிடத்தில் பலியானார். ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !