மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
திட்டக்குடி: ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட மூன்று பேர் இறந்தனர். சிறுமி உட்பட 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தாலுகா, ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி ரேகா,36; தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.இவர், தனது மகள்கள் நந்தனா,13; மிருதுளா,8; சகோதரி இந்துமதி, 38; அவரது மகள் மகாலட்சுமி,14; மற்றும் தோழி தெரசா டெல்பின்,22; அவரது இரண்டரை வயது மகள் ஹெலன் ஆகியோருடன், புதுச்சேரி சுற்றுலா செல்ல நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திருச்சியில் இருந்து பிஒய்05-விடி-6463 பதிவெண் கொண்ட இன்னோவா காரில் புறப்பட்டனர். காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவின்குமார்,40; ஓட்டினார்.இரவு 10:15 மணிக்கு கடலுார் மாவட்டம், ராமநத்தம் எழுத்துார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைக்குப்புற கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடினர்.தகவலறிந்த ராமநத்தம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று விபத்தில் காரின் இடிபாட்டில் சிக்கியவர்களை வெகு நேரம் போராடி மீட்டனர்.அதில், இந்துமதி,38; நந்தனா,13; டிரைவர் பிரவின்குமார்,40; ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த ரேகா, மிருதுளா, மகாலட்சுமி, தெரசா டெல்பின், குழந்தை ஹெலன் ஆகியோர் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago