உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகள், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் பிரபலமான பயங்கரவாத அமைப்பு, அல் - குவைதா. இதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்பு அன்சருல்லாஹ் பங்களா டீம். வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த இயக்கத்தின் தலைவர் ஜாஷிமுதின் ரஹ்மானி. வங்கதேசத்தில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்த, ஏ.பி.டி., என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு, இந்தியாவிலும் கிளை பரப்பி வளர்ந்துள்ளது. இதன் ஸ்லீப்பர் செல்கள், இந்தியாவில் பரவலாக தங்கி செயல்படுகின்றனர்.

கைகோர்ப்பு

ஜாஷிமுதின் ரஹ்மானி, வங்கதேச சிறையில் இருந்த போதே, அவரது அமைப்பினர் இந்தியாவுக்குள் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தியதை ஓர் அதிகாரி கவலையுடன் விவரித்தார். யூனுஸ் அரசு அவரை விடுதலை செய்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்குள் செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளோடு,ரஹ்மானியின் அமைப்பினரும் கைகோர்த்து செயல்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ராணுவ உளவு பிரிவினர், மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதையடுத்து உளவு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மத்திய உளவுத்துறை அதிகாரி நமது நிருபரிடம் கூறியதாவது: ஜமா அத் - இ - இஸ்லாமி என்ற அமைப்புக்கு ஷேக் ஹசீனா அரசு தடை விதித்திருந்தது. யூனுஸ் அரசு அதை ரத்து செய்துள்ளது. இந்திய பிரிவினைக்கு முன்பாகவே, சையத் அபுல் அலா மவுதுாதியின் தலைமையில், 1942ல் நிறுவப்பட்டது இந்த அமைப்பு. இதுவரை நான்கு முறை தடை செய்யப்பட்டு இருக்கிறது.கடந்த, 1959, 1964ம் ஆண்டுகளில் பாகிஸ்தானிலும், 1972ல் சுதந்திர வங்கதேசத்திலும், புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின், ஜமா அத் மற்றும் அனைத்து மத கட்சிகளும் தடை செய்யப்பட்டன. தற்போது தடை நீக்கப்பட்டதன் வாயிலாக, இந்த அமைப்பானது மற்ற அரசியல் இயக்கங்களை போல, அரசியல் செயல்பாடுகளில் இறங்க வழி கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தான், ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, ஷெர்பூரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையை தகர்த்து, 500க்கு மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.காஜிபூரில் உள்ள மற்றொரு சிறையிலும் தாக்குதல் நடத்தி, 209 கைதிகள் தப்ப ஏற்பாடு செய்தனர். தப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகள். அவர்களில் பலர் தமிழகத்தில் கால் பதித்திருக்கலாம் என்று நம்பகமாக தெரிகிறது.

வேறு அடையாளம்

அதேபோல, வங்கதேசத்தின் ஜமா அத் -- உல் --- முஜாஹிதீன் அமைப்பு, மேற்கு வங்கத்தில் ரகசியமாக செயல்படும் ஐ.எஸ்.-ஐ.எஸ்., கிளைக்கு பக்கபலமாக இயங்குகிறது. அதன் தீவிர உறுப்பினர் மேற்கு வங்கத்தின் லப்பூரை சேர்ந்த மஜ்னு எனப்படும் மோசி என்ற மொசிருதீன். இவர் பல ஆண்டுகளாக, திருப்பூரில் வேறு அடையாளத்துடன் வசிப்பதாக வங்கதேச உளவுத்துறை அனுப்பிய தகவலின்படி, கோல்கட்டாவிற்கு 2016ல் குடும்பத்துடன் செல்லும் வழியில், தமிழக போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் சோதனையிட்ட போது, ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பின்னணியில் தான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து உழைப்பாளிகளை ஈர்க்கும் திருப்பூர் நகரம், புகலிடம் தேடி வரும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடமாக தோற்றம் அளிக்கிறது. தமிழக காவல் துறை மனம் வைத்தால் மட்டுமே அந்த தோற்றத்தை மாற்ற முடியும் இவ்வாறு அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

veeramani
செப் 07, 2024 09:53

திருப்பூரில் டெச்ணிகள் உழைப்பாளிகள் பற்றாக்குறை ... திருப்பூர் இந்தியாவில் அமைந்துள்ளது. தமிழக உழைப்ப்பாளிகளுக்கு முதல் உரையை கொடுத்து, பங்களாதேஷிகளை வெளியே அனுப்பவேண்டும் . தற்போதைய சூழ்நிலையில் பங்காளதேசிகள் யார், ரோஹிங்கியா முஸ்லிமக்ள் யார் என தெரியவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கருதி இவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பவேண்டும்.


Palanisamy Sekar
செப் 01, 2024 06:30

ஆட்கள் பற்றாக்குறை என்று சகட்டுமேனிக்கு மர்ம நபர்களை வேளைக்கு அனுமதிக்கின்ற திருப்பூர் பிசினஸ் மக்கள் இன்னும் சில காலங்களில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகப் போகின்றனர் என்கிறது உளவுத்துறை. வீடுகளில் வாடகைக்கு விடுவோரும் அதிக அளவுக்கு இன்னொரு சமயத்தில் பாதிக்கப்பட போகிறார்கள். வாடகைக்கு வீட்டை கொடுப்போர் போலீசிடம் அவர்களின் விவரங்களை கொடுத்துவிட்டு போலீசின் அனுமதியோடு வாடகைக்கு விட உத்தரவிடவேண்டும். பங்களாதேஷில் பெரிய அளவில் பாகிஸ்தானின் தூண்டுதலில் சிக்கியவர்கள் தேர்வு செய்த நகரம்தான் திருப்பூர். பங்கடேஷுக்கும் திருப்பூருக்கும்தான் பெரிய அளவில் ஆடை ஆயத்தங்களில் போட்டி உள்ளது. திருப்பூரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டால் பங்களாதேஷ் மிகப்பெரிய வியாபார ஸ்தலத்தை பிடித்துவிடும். பின்னர் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை திருப்பூர் முற்றிலும் இழந்து விடக்கூடும். திருப்பூர் பிசினஸ் மக்களே உஷார். திருப்பூரில் வாடகைக்கு வீடுகளை விடுவோரே அதீத பேராசையில் உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளாதீங்க. உஷார் உஷார் மர்ம நபர்களிடம் உஷார்


பெரிய ராசு
ஆக 31, 2024 21:37

தமிழில் கூட பெயர் எழுதாதவன் உனக்கு என்ன தெரியும்..தமிழ் மட்டுமே தெரிந்து தமிழில் எழுதும் நாங்கள் மதம் சார்ந்தவர்கள்,, ஓடிவிடு மக்கள் வெகுண்டு எழுந்தாள் தடிகூட மிஞ்சாது


Mohan D
செப் 02, 2024 09:40

ஹ ஹ ஹிந்துக்கள் ஆகிய நாங்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றைக்குமே அடிமைகள் ..அப்படியெல்லாம் வெகுண்டு ஏலவே மாட்டோம் இது சத்தியம் சத்தியம் ...அப்டி இல்லாமலா சிலிண்டர் வெடிச்சதுனு உருட்டுனவங்களுக்கே நாங்க 40/40 கொடுத்தோம் ...


Rasheel
ஆக 31, 2024 20:54

இந்த காட்டுமிராண்டிகளுக்கு வேலை குடுக்கும் கோமாளிகளை கடுமையான தண்டனை மூலம் தண்டிக்க வேண்டும். இங்கே சட்ட விரோத செயல்கள், கொலை, செயின் பறிப்பு பாக்டரி தீ வைப்பு போன்ற செயல்களை செய்து விட்டு ரயிலை பிடித்து ஈஸியாக பார்டர் தாண்டி சென்று விடுவார்கள்.


Duruvesan
ஆக 31, 2024 22:30

உனக்கு என்ன ஆச்சி? Same side கோல் போடறே?


N Sasikumar Yadhav
ஆக 31, 2024 19:35

வந்தாரை வாழ வைத்த திருப்பூரில் குண்டு வைக்காமல் இருந்தால் சரி . தமிழகம் கேரளா பம்பாய் போன்ற இடங்களில் அனைத்து விதமான சோதனைகளையும் செய்ய வேண்டும்


Duruvesan
ஆக 31, 2024 17:53

மொத்த கும்பலும் தீவிரவாதி இல்லை ஆனால் தீவிரவாதி மொத்தம் அவங்க கும்பல் தான்,


venugopal s
ஆக 31, 2024 17:43

நாட்டின் எல்லையை கண்காணித்து இதுபோன்ற தீவிரவாதிகள் ஊடுருவலை இந்திய ராணுவத்தின் துணையுடன் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே உண்டு. மத்திய அரசின் கையாலாகாத்தனத்துக்கு மாநிலங்களைக் குறை கூற சங்கிகளால் மட்டுமே முடியும்!


N Sasikumar Yadhav
ஆக 31, 2024 19:37

வாங்கி தின்னும் பிரியாணிக்கு விசுவாசமாக இருக்க உங்களைவிட வேறுயாருக்கும் தகுதியில்லை


தமிழ்வேள்
ஆக 31, 2024 19:39

பயங்கரவாதி கும்பலிடம் சில்லறை வாங்கி கொண்டு சகலவிதமான போலி சான்றிதழ்கள் தயாரித்து ரேஷன்கார்டு தரும் திராவிட மாடல் மாநில அரசு தேச துரோகி கும்பலை என்ன செய்யலாம் வேணு? டிஸ்மிஸ் செய்து ராணுவத்தை அனுப்பி ஒரு காட்டு காட்டலாமா?


Balasubramanian
ஆக 31, 2024 15:57

எங்கெல்லாம் போதை மருந்து பழக்கம் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் Drug Money என்னும் கணக்கில் வராத தீய வழிப் பணமும் தீவிரவாதிகள் நடமாட்டமும் நிறையவே இருக்கும்! இது நாட்டுக்கு நல்லது அல்ல!


Sivagiri
ஆக 31, 2024 13:59

கிட்டத்தட்ட சென்னை முதல் கனியாகுமாரி வரை , , அனைத்து கார்ப்பரேஷன் / முனிசிபல் / பஞ்சாயத்து துப்புரவு வேலை முதல்கொண்டு - - டீக்கடை , ஓட்டல் , பார் , ஹோல்சேல் கடை , சில்லறை கடை , மால்கள் , அனைத்து சரக்கு வாகன ஓட்டுனர்கள் , சுமைதூக்குவது , அனைத்து விதமான பெரிய / சிறிய தொழிற்சாலைகள் , மெக்கானிக் வேலைகள் , எல்லாவிதமான பெரிய சிறிய - கட்டுமான வேலைகள் , ரோடு பாலங்கள் கட்டுமானங்கள் , என எங்கு பார்த்தாலும் வடவர்கள்தான் - - அதில் மூன்றிஸ்ல் ஒரு பங்கு பங்களாதேஸ்-காரங்க தான் , ஆப்கானிஸ் , பாகிஸ்தானிஸ் களும் , பங்களாதேஷ் வழியாக ஊடுருவி விட்டார்கள் - - - இவர்களுக்கு , பத்து நிமிடத்தில் ஆதார் - டிரைவிங் லைசென்ஸ் - பேங்க் அக்கௌன்ட் - கிடைத்து விடுகிறது . . . தமிழனை போதையில் வைத்து , அவர்கள் வீட்டு பெண்களுக்கு இலவச பணம் கொடுத்து , அப்டியே ஓட்டையும் வாங்கி , தெருவில் விட்டு விட்டார்கள் - - இப்போது தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் படிக்கும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தெரு கூட்டும் வேலை கூட கிடைக்காது - ஏன் பிச்சை எடுத்தாலும் ஒரு பைசா கிடைக்காது - -


Rajah
ஆக 31, 2024 13:06

வந்தாரை வாழ வைத்து கடைசியில் எல்லாவற்றையும் இழந்து அழியப்போகின்றார்கள். ஆனால் சமூகநீதி பாதுகாக்கப் படும். திராவிடம் செழித்தோங்கும். முடிவில் தமிழகம் அழிந்து விடும். மக்களே இப்போதாவது திராவிட டாஸ்மார்க் போதையில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை