துணை கலெக்டர்கள் இடமாற்றம்
சென்னை:மதுரை மாவட்டம், மேலுார் ஆர்.டி.ஓ., உட்பட, துணை கலெக்டர்கள் 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாசில்தார்கள் 40 பேருக்கு, துணை கலெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய்த் துறை கூடுதல் பொறுப்பு செயலர் விஜயராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.