உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மணமக்கள் பெயரைப்பார்த்தால் சங்கடமாக உள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்காவது தமிழில் பெயர் சூட்டுங்கள்,'' என திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை கொளத்தூர் தி.மு.க., நிர்வாகி முரளிதரன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் மகேஷ்வர் - திவ்யகணபதியை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மணமக்கள் பெயரை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சங்கடமாக உள்ளது. தமிழ்ப்பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. பிறக்கும் குழந்தைளுக்கு அழகான தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள் அதுதான் என் அன்பான வேண்டுகோள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1e59yjra&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குடும்ப கட்டுப்பாடு

குழந்தைகளை பெற்றுக் கொள்ள உடனடியாக அந்த காரியத்தில் இறங்கி விட வேண்டாம். பொறுத்து நிதானமாக, அளவோடு பெற்று வளமாக வாழ வேண்டும் என்பது தான் குடும்ப கட்டுப்பாடு பிரசாரம். அதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் தான் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது எம்.பி., தொகுதி குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்க மாட்டோம்!

அப்படிப்பார்த்தால் நாம் அதிகம் பெற்றிருக்கலாம். நம்மை விட அதிகம் பெறக்கூடிய திறமை யாருக்கும் எந்த நாட்டுக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது. ஏனெனில் நாமெல்லாம் தமிழர்கள். அதனால் தான் மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்க முடியாது. இரு மொழிக்கொள்கை தான் வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் கொண்டிருக்கிறோம்.

தமிழ்ப்பெயர்

5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு கையெழுத்து போட மாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 150 )

Nagarajan D
மார் 21, 2025 18:51

முதலில் நீங்கள் உங்கள் பெயரை தமிழில் வையுங்கள் உங்க மகனுக்கும் பெயரை மாற்றுங்கள்


Raj
மார் 21, 2025 06:01

ஐயா உங்கள் துணிவும் மக்கள் மீதான நம்பிக்கையும் மிகவும் சிறந்தது. உங்கள் பெயர், உங்கள் தந்தையார் பெயர், உங்கள் குடும்பத்தார் பெயர் இவைகள் எல்லாம் தமிழ் என்று நம்ப வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. அதே போல மக்களுக்கு நிரந்தரமாக ஞாபகமறதி நோய் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது உண்மையே. திருமண வீட்டிற்குப் போனால் மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ பெரியவராக சில நல்ல அறிவுரைகள் மட்டும் நீங்கள் சொல்லி இருக்கலாம். நீங்கள் பேரப் பிள்ளைகள் எடுத்தவர். அது போல் மணமக்கள் நீடூழி வாழ்ந்து பெருவாழ்வு வாழுமாறு வாழ்த்தி இருக்கலாம். அதையெல்லாம் நீங்கள் மறந்தது உங்களை விருந்தினராக அழைத்தவரின் பெரும் பேறு. என்ன செய்வது


RAVINDRAN.G
மார் 20, 2025 15:03

ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் . நாங்க நம்பறோம் சார்


Ramalingam Shanmugam
மார் 17, 2025 11:18

தங்கள் பெயர் தமிழோ


Thanjavur K. Mani
மார் 20, 2025 03:56

சரியான பதில். கே. மணி. சென்னை. 20.03.2025-Thu.


தத்வமசி
மார் 13, 2025 12:14

தங்களின் வீடு முழுவதும் சாமி சிலைகள், போட்டோக்கள். பெயர்கள் அனைத்தும் வடமொழி. ஆனால் சொல்வதை பாருங்கள்.


நரேந்திர பாரதி
மார் 13, 2025 08:09

சொல்றது யாரு?


RAMKUMAR
மார் 11, 2025 15:42

மகேஷ்வரனையும் - கணபதியையும் பார்த்தால் படித்தால் சங்கடம் பயம் எல்லாம் வரும் . பயம் ரொம்ப வரும் .. வரணும் ......


sankar
மார் 10, 2025 17:21

ஸ்டாலின், வடமொழி கலப்பு- உதயநிதி, சமஸ்க்ரித பெயர்- கலாநிதி, தயாநிதி என்று எல்லா நிதியுமே சமஸ்க்ரிதம்தான் - ஊருக்குத்தான் உபதேசமா ?


C.SRIRAM
மார் 07, 2025 11:38

பார்த்தாலே சங்கடம் தான் , உளறல் அதிக சங்கடம்


S.V.Srinivasan
மார் 06, 2025 13:30

உங்க பெயரை பார்க்கும்போதும் சங்கடமாத்தான் இருக்கு. உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றிக்கொண்டு அப்புறம் உங்கள் தமிழ் பற்றை காட்டுங்கள் முக்கிய மந்திரி அவர்களே.


சமீபத்திய செய்தி