மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago
மயிலாடுதுறை:சீர்காழி அருகே டாஸ்மாக்கில் காலாவதியான பீர் வாங்கி குடித்த வாலிபர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.31, நாங்கூர் மேலத் தெருவை சேர்ந்தவர் சார்லஸ்.27, ,ஆகிய இருவரும் தென்னலக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் பிற்பகல் டின் பீர்களை வாங்கி அருந்தியுள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த அவரது நண்பர் அளக்குடி பிரகாஷ் என்பவர் மற்ற நண்பர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய டின் பீர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியுடன் காலாவதி ஆனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
1 hour(s) ago | 2
12 hour(s) ago | 1
13 hour(s) ago