உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்வாதிகள் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு மாறுவது துரதிருஷ்டம்

அரசியல்வாதிகள் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு மாறுவது துரதிருஷ்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''புலன் விசாரணையில் தெரியவராத விவரங்கள் பின்னர் தெரியவரும்போது, அதுகுறித்து மேல் விசாரணை நடத்தலாம். இதன் வாயிலாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்; உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. மேல் விசாரணை நடத்த அனுமதி வழங்குவது மாஜிஸ்திரேட்டின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது,'' என்றார்.குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது, முந்தைய ஆட்சியில் போலீஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்க விரும்பாததால், பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்தன.எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.

அப்போது நீதிபதி குறிப்பிட்டதாவது:

ஆட்சி மாற்றம் காரணமாக, போலீசாரின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை.முன்னாள் மற்றும் இன்றைய அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது சரி என முடிவுக்கு வந்து, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்குகளை, ஒரு வேளை முடித்து வைத்தாலும் கூட, இந்த வழக்குகளின் விசாரணையின்போது நடந்த முறைகேடுகள் குறித்து எவரேனும், எப்போதாவது கேள்வி எழுப்புவர் என்ற செய்தியை சொல்லவே, இந்த வழக்குகளை விசாரணைக்கு, இந்த நீதிமன்றம் எடுத்து கொண்டது' என தெரிவித்த நீதிபதி, பதில் வாதங்களுக்காக விசாரணையை வரும், 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S. Neelakanta Pillai
ஜூன் 12, 2024 14:24

துரதிருஷ்டம் என்று சொல்லி தப்பிப்பது நீதிமன்றத்திற்கு அழகல்ல. பூதம் வரும் இந்த கற்பனையில் ஓய்வு பெற்ற ஏழு நீதிபதிகள் தூக்கம் இல்லாமல் யாருக்கோ சலாம் வைப்பதற்காக கடிதம் எழுதினார்கள். ஆனால் நீதிமன்றங்களிலேயே சாட்சியங்கள் மாறுவதும் காவல்துறை செயல்பாடு தலைகீழாவதும் பற்றி பாவம் அந்த நீதிபதிகளுக்கு சொரணையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். குற்றங்களை நேரிடையாக குற்றம் என்று சொல்லி பதிவு செய்ய பழகுங்கள். அப்போதாவது ஒரு வேலை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பாக இருக்கும்.


Ramesh Sargam
ஜூன் 12, 2024 11:42

காவல்துறை, ஆளும் மாநில கட்சியின் அதிகாரத்திற்கு, அச்சுறுத்தலுக்கு உட்பட்டு பணிபுரியாமல், தன்னிச்சையாக, நேர்மையாக பணிபுரியவேண்டும். மாநில அரசின் கூண்டுக்கிளியாக caged parrot பணிபுரியக்கூடாது.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 12, 2024 10:08

இன்றைக்கு செய்யாத குற்றத்திற்காக ஏராளமான அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், குற்றங்கள் செய்துவிட்டு அரசியல் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இதுதான் நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றங்களுக்கும் தெரியும். என்னசெய்வது? அவர்களில் சிலரும் இதற்க்கு உடந்தை. கடவுள் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும்.


sankar
ஜூன் 12, 2024 09:10

இதுதான் உங்க டக்கா சார் - ஆனாலும் வெறி வெறி லேட் பிக்கப்


GMM
ஜூன் 12, 2024 07:20

தமிழக போலீசார் மத்திய அல்லது மாநிலங்கள் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும். அதுவரை அரசியல் வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் மீது போலிஸ் நிலைப்பாடு மாறும்? அல்லது தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி யை கவர்னர் நியமிக்க வேண்டும்.


va.sri.nrusimaan srinivasan
ஜூன் 12, 2024 07:03

clear mirror that judiciaries r also under d control in politicians hands.


Bala Paddy
ஜூன் 12, 2024 06:59

சாமானியர் மட்டுமே தண்டிக்க படுவார்கள். அரசியல்வாதிகளின் பயிரை கூட இந்த நீதி துறையால் அசைக்க முடியாது ராமாயணம் உபன்யாசம் எல்லாம் சாமானியருக்குதான்.


N Sasikumar Yadhav
ஜூன் 12, 2024 06:55

தேர்தல் ஆணையம் மாதிரி அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பு உடனடியாக தேவை நமது பாரதநாட்டிற்கு . ஆட்சி மாறினால் காட்சி மாறுகிறது .


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 06:39

நேர்மை சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பேர்ப்பட்டவர்கள் பதவியில் தொடர்ந்தால் நிச்சயம் நேர்மையான முறையில் விசாரணை நடக்காது. ஆகவே வழக்குகளை வேறு வடமாநிலங்களுக்கு மாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை