உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகர்கோவில் வந்தே பாரத் தீபாவளி முன்பதிவு அமோகம்

நாகர்கோவில் வந்தே பாரத் தீபாவளி முன்பதிவு அமோகம்

சென்னை: சென்னை எழும்பூர் -- நாகர்கோவில் இடையேயான, 'வந்தே பாரத்' ரயில் போக்குவரத்து நேற்று துவங்கியது. தீபாவளி பண்டிகைக்கு இந்த ரயிலில் சொந்த ஊர் செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், 'ஏசி சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் சேர் கார்' பெட்டிகள் நிரம்பின. வரும் 5, 6, 7ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.தீபாவளி பண்டிகை, அக்டோபர், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அக்டோபர் 29ம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல, நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளனர். மீதம், 31 இடங்கள் மட்டுமே இருந்தன. அதேபோல, தீபாவளி விடுமுறை முடிந்து நாகர்கோவிலில் இருந்து நவ., 3ம் தேதி சென்னைக்கு புறப்படும் வந்தே ரயிலில், டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !