உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் சிந்தித்து பேச வேண்டும்; சரத்குமார் அட்வைஸ்

விஜய் சிந்தித்து பேச வேண்டும்; சரத்குமார் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு முன்பாக, சிந்தித்து பேச வேண்டும் என்று த.வெ.க., தலைவர் விஜய்க்கு பா.ஜ., நிர்வாகி சரத்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் அரசியலுக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம், மகிழ்ச்சி என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். எல்லோருமே அரசியலுக்கு வரணும் என்று நினைப்பவன் நான். கடந்த கூட்டத்தில் பேசும் போது கூட, மும்மொழி கொள்கை, நீட் வேண்டாம் என்று விஜய் சொன்னார், அதற்கு பதில் அளித்து விட்டேன். இப்ப மணிப்பூர் பற்றி சொல்லியிருக்காரு. மணிப்பூரில் மெய்தி, குக்கி என்று இரு இன மக்கள் இருக்காங்க. அவர்களுக்குள் பல்லாண்டுகளாக பிரச்னை உள்ளது.அதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு, மக்கள் பாதிக்காத வகையில் சமரசத்தை கொண்டு வர முடியுமா? என்று பார்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை இங்கு இப்படி பேசியிருக்க வேண்டாம். விஜய் கொஞ்சம் சிந்தித்து பேச வேண்டும். ஏனெனில் அவரது பயணம் நல்லா வரணும். கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுவது நல்லது, என சரத்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramchandran Natarajan
டிச 15, 2024 07:49

உங்கள் மாதிரி சிந்தித்து பிஜேபியில் ஐக்கியம் ஆக வேண்டுமா


ghee
டிச 15, 2024 15:12

இப்படிக்கு திராவிட கொத்தடிமை


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 05:52

படிக்க வாய்ப்பிருந்தும் படிக்காமல் சுற்றிய மக்களை தமிழக மக்கள் உணர்ந்து ஒதுக்கி வைக்கவேண்டியா காலம் வந்துவிட்டது


tirou
டிச 15, 2024 00:42

அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் னு வாய தொறந்து அவர் வேலைய உட்டு வந்துட்டஆர்


பாமரன்
டிச 15, 2024 00:09

தமிழக அரசியல் கூத்தாடிகளில் அதிமுகவின் தலைமை பொறுப்பை தவறவிட்ட இரண்டு நபர்களில் இவரும் ஒருவர். என்டே அம்மே பீரியட்ல ஒழுங்கா காய் நகர்த்தியிருந்தா அவருக்கு பின் இவர் அந்த கட்சியின் தலைவராக ஆகியிருந்திருக்கலாம்... அதேபோல் எம்ஜிஆர் காலத்தில் பாக்யராஜ் வாய்ப்பு தவறவிட்டார்... விழுந்து விழுந்து பிறண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்னு ஒரு சொலவடை உண்டு அதற்கு பொருத்தமான பீஸ்கள் இவை... இதுக அட்வைஸ் பண்றது தான் சோகம்...


GSR
டிச 14, 2024 22:14

சிந்திக்க தெரிந்தவர்கள் தேர்தலில் நின்றால் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்களா?


என்றும் இந்தியன்
டிச 14, 2024 18:38

விஜய் -என்னை-சந்தித்து பேசவேண்டும் : சரத்குமார் அட்வைஸ். இப்படிப் படித்தால் உண்மை அர்த்தம் விளங்கும்


Gnanam
டிச 14, 2024 18:31

மேலும் விஜய் இன் எதிரி பிஜேபி...நீங்க அவரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பது ஓகே...தான்... சுப்ரீம் ஸ்டார் ன்னு நீங்களே வச்சிகிட்டது... சூப்பர் ஸ்டார் ஜனங்க தந்தது


Sridhar
டிச 14, 2024 18:23

விஜய்க்கு அட்வைஸ் கொடுக்கற அளவுக்கு இவருக்கு என்ன அருகதை இருக்கு ..பணம் அடிப்பது ஏமாற்றுவது ஜெயிலுக்கு போகாமல் தப்பிப்பது காரில் கட்டு கட்டாக பணம் எடுத்து போவது இதல்லாம் இவருக்கு இவருக்கு தெரிந்த கலை


N.Purushothaman
டிச 14, 2024 18:06

அரசியல் அறிவு சிறிதும் வெளிப்படுத்தாத இந்த நடிகர் பின்னால் கூட்டம் ஒரு தேர்தலுக்கு தான் நிக்கும் ...பிறகு காணாமல் போகும் ..


Matt P
டிச 14, 2024 17:55

நம்ம அரசியலில் எவர் எப்போது சிந்தித்து பேசிஉள்ளனர்?. சிந்தித்து பேசினாலும் சிந்திக்க தெரியலைன்னா அவருக்கு வேற வேலை இல்லை என்பர். அதுவும் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் ஏன்ன பேசினாலும் மக்கள் நம்ம பக்க தான் என்று போயிட்டு இருப்பாங்க. காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கியாச்சு இனிமேல் என்ன வேணா பேசலாம் என்ன வேணா செய்யலாம். இது தான் தமிழக அரசியல்.


சமீபத்திய செய்தி