உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

ஊட்டி: ஊட்டியில் நடிகர் சூர்யா படப்பிடிப்புக்கு, ரஷ்ய நடிகர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்தது யார் என, போலீசார் தோண்டித் துருவி விசாரிக்கின்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த, 27ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். அவர்கள், ஊட்டியில் உள்ள, சில தனியார் ஓட்டல்களில் தங்கி பட பிடிப்பிற்கு சென்று வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oln7l0ca&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தங்கும் விடுதி

சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு, இத்தகைய அனுமதி கிடையாது. நடிகர்களை அழைத்து வரும் படக்கம்பெனிகள், என்ன காரணத்துக்காக நடிகர்களை அழைத்து வருகிறார்களோ, அதை தெளிவாக குறிப்பிட்டு அனுமதி பெற்று விடுவர். அது மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வந்து தங்கினால், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ரஷ்யா நாட்டினர் தங்கி இருந்தது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, போலீசாரை அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.

எச்சரித்த போலீசார்

போலீசார் கூறுகையில், 'ஊட்டி ஹில்பங்க் ஓட்டல் வெல்பேக் ரெசிடென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் சபையர் மற்றும் சபையர் கார்டன் வியூ ஆகிய ஓட்டல்களில் தங்கிய, 155 பேரில், 42 பேர் கடந்த வாரம் ரஷ்ய திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின், விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம்.

கடும் நடவடிக்கை

பின், அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் நேற்று முன்தினம் வெளியேற்றினோம். இனி, வரும் நாட்களில் வெளிநாட்டினர் ஊட்டியில் தங்குவது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர். சுற்றுலா விசாவில் அழைத்து வரப்பட்ட ரஷ்யர்களை, விதிகளுக்கு புறம்பாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தியது குறித்தும் படக்கம்பெனியிடம், தோண்டித் துருவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 18, 2024 16:27

சுற்றுலா விசாவில் வெளிநாட்டவர் இந்தியா வந்து ஒரு கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், ஆனா அதே கட்சி முன்னணித் தலைகள் தயாரிக்கும் சினிமாவில் நடிக்க கூடாது . இது என்னங்க சட்டம்?


அஆ
ஆக 18, 2024 12:53

அண்ணன் மும்பையிலிருந்தபடியே ஊப்கிஸ் தலைமைக்கு போன் போட்டு அந்த இன்ஸ்ஐ தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்புவார். வந்த வுஎளிநாட்டினருக்கு நம்ம தத்தி தேனீர் விருந்து அளித்து உபசரிக்கும்.


ஆரூர் ரங்
ஆக 18, 2024 11:49

சென்னை வீட்டுக்கு இன்னும் நம்ம வரிப்பணத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. யாருக்காக?


rasaa
ஆக 18, 2024 11:48

ஒன்றும் நடக்காது. பெரிய இடத்து ஆசீர்வாதம் இருக்கும்வரை எதுவேண்டுமானாலும் செய்யலாம். எஸ்.பி நிஷா மற்றும் சுஜாதா இவர்களை நினைத்தால்தான் பாவமாக உள்ளது. என்ன நடக்குமோ


அப்பாவி
ஆக 18, 2024 11:33

சிங்கம்... சிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2024 10:44

இவனுங்க தான் நாட்டினை காப்பது போல நடிக்கவும் பேசவும் முடியும்


Svs Yaadum oore
ஆக 18, 2024 10:13

அண்னன் மும்பையில் தங்கிட்டாரு .....மும்பை மாபியா கும்பலிடம் விசாரித்தால் முழு உண்மை தெரிய வரும் ....


M Ramachandran
ஆக 18, 2024 09:46

அந்த கும்பலுடன் சேர்த்தாலேயே கோணல் புதிய வந்து விடும் போலே இருக்கு. சட்டம் என்று யிருப்பதை மதிப்பதில்லை.


Duruvesan
ஆக 18, 2024 09:28

உதயநிதி அண்ணன் ரெட் ஜெயன்ட் கிட்ட குடு, எல்லாம் ஓகே ஆயிடும்


மேலும் செய்திகள்