உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

சென்னை: 'முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cwnyi2jy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,261 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை துவங்கி விட்டது.

ரூ.3,ஆயிரம் பணம்

ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.

டோக்கனுக்கு கிடைத்த வெற்றி

அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.

சமூக அநீதி

மறுபுறத்தில் பா.ம.க., மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாமகவினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தனர். பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ம.க, மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தி.மு.க., மீது அன்புமணி குற்றச்சாட்டு

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: விக்கிரவாண்டியில் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. இடைத்தேர்தலில் பணம், பொருள் கொடுத்ததை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தவில்லை. பணம், அதிகாரத்தை வைத்து தி.மு.க., இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தி.மு.க., செலவு செய்துள்ளது. தேர்தல் கமிஷன் இருக்கிறதா?. பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் தந்து இடைத்தேர்தலை ஜனநாயக கேலிக்கூத்தாக்கி விட்டது திமுக. 33 அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பணம் தந்தனர். பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இடைத்தேர்தலுக்காக திமுக செலவிட்டுள்ளது. பணம் கொடுத்து வென்றதை முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளக்கூடாது. இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S.sureshbsbu
ஜூலை 15, 2024 11:40

Correct


அரசு
ஜூலை 13, 2024 21:17

கீழே விழுந்தது உண்மை. ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை. இது உங்களுக்கு மட்டும் தோல்வி இல்லை. ஒட்டு மொத்த NDA க்கு கிடைத்த படு தோல்வி. .


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:39

கடைசி வரை இலவு காத்த கிளி தான் பாமக. அடுத்த தேர்தலில் எந்த கூட்டணியில் இருப்பீர்கள் ராமதாஸ். கூட்டணி முக்கியமில்லை மக்கள் ஆதரவுதான் முக்கியம் என்பதை எப்போது உணர போகிறீர்கள். இனியாவது பெட்டியை மறந்துவிட்டு மக்கள் மனதை பாருங்கள்


panneer selvam
ஜூலை 13, 2024 19:24

Dr. Ramdas Sahib , no use of crying now . Even if we believe whatever you say about Vikaravandi bye election, people have shown their loyalty to the donors . You have played Caste card , but voters trusted cash on hand . You have talked about tomorrow but people want to enjoy the presents given by ruling alliance . So present is better than tomorrow .


Nandakumar Naidu.
ஜூலை 13, 2024 18:34

திமுக விற்க்கு வாக்களித்த ஹிந்துக்கள் இன்னும் ஊழல் வாதிகளின் பணத்திற்கு விலை போய்விட்டார்களே என்று நினைக்கும் போதும் மற்றும் தன் குலத்தை அழிக்க நினைக்கும் தன் எதிரிகளுக்கே வாக்களித்தார்கள் என்று நினைக்கும் போதும் மனம் வேதனையாக உள்ளது. ஈசன் எப்போது இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பான்?


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:35

மதவெறியர்களுக்கு பெரும்பான்மையான தமிழர்கள் ஆதரவு கிடையாது. அதை புரிந்து கொண்டு கருத்து எழுதுங்கள் நாயுடு


T.sthivinayagam
ஜூலை 13, 2024 17:25

அப்போ மைனாரிட்டி பாஜகவுக்கு மக்கள் வாக்கு இல்லை என்று கூறுகிறாரா என்று மக்கள் கேட்கின்றனர்


Swaminathan L
ஜூலை 13, 2024 17:04

மருத்துவர் ஐயா சொல்வதைப் பார்த்தால் இது விக்கிரவாண்டி மக்களின் வெற்றி ஓட்டுக்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் கெத்தாகச் சம்பாதித்திருக்கிறார்களே திருமங்கலம் ஃபார்முலாவின் பிரமாண்டமான பரிணாம வளர்ச்சி இது


D.Ambujavalli
ஜூலை 13, 2024 16:44

இந்தத் தோல்விக்கு பயந்து தான் பழனிச்சாமி தலை கொடுக்கவில்லை அப்படி இருந்தும், ஒரு இடைத்தேர்தலுக்கு ஆளுக்கு 5 முதல் 10 வரை 'செலவு' செய்யுமளவு, பொதுத் தேர்தலில் கூட இப்படி இறக்கவில்லை, tough ஆகியிருக்கிறதென்றால், அதிமுகவும் நின்றிருந்தால் இந்த வெற்றி கூட கேள்விக்குறியாகி இருக்கும்


pv, முத்தூர்
ஜூலை 13, 2024 16:15

Live la ஒரு மாங்கா வெம்பிக்கெண்டிருக்கிறது.


பிரேம்ஜி
ஜூலை 13, 2024 16:01

இப்படிச் சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான். இன்னும் முப்பது ஆண்டுகள் ஆனாலும் மாங்காய் பழுக்காது.


மேலும் செய்திகள்