உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடலூர்: 'நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல' என கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.கடலுார் மாவட்டத்தில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில், 'அப்பா' எனும் புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வியும், மருத்துவமும் இரு கண்கள். ஒவ்வொரு மாணவனும் தமிழகத்தின் சொத்து, கல்வித்துறையில் சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

ஏற்க மாட்டோம்!

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது.இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டுகிற கொள்கை தான் புதிய கல்வி கொள்கை. இதனை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம்.

ரூ.10 ஆயிரம் கோடி

இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும். அவர்கள் பத்தாயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2 ஆயிரம் கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால் என்னவாகும்?கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்.

எதிரி அல்ல

உங்களது குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? 3வது மொழி திணிக்கப்பட்டு உங்கள் குழந்தைகளின் படிப்பு தடைப்பட்டு போக வேண்டும் என்று நினைப்பீர்களா என பெற்றோர்களிடம் கேட்கிறேன். நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல. அதனை யார் விரும்புகிறார்களோ, அவர்கள் கே.வி., பள்ளியிலோ, வேறு வகையிலோ, படிப்பதை தமிழகம் ஒருபோதும் தடுத்தது இல்லை. தடுக்க போவதும் இல்லை.

திணிக்காதீர்கள்

ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள், திணிக்க நினைத்தால் தமிழர்களுக்கு தனி குணம் உண்டு என்பதை தமிழகம் காட்டிவிடும். இருமொழி கொள்கையால் தமிழர்களின் திறமை எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் உயிரை விட தமிழ்மொழியை நேசிக்கிறோம். எங்கள் மொழியை யார் அழிக்க நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 102 )

Nagarajan S
பிப் 24, 2025 20:10

2026 தேர்தல் வருகிறதே அதற்காக இப்போதே இருமொழி கொள்கையை கையில் எடுத்து இந்தி திணிப்பு என்ற மாயையை முன்னிறுத்தி 234 தொகுதிகளிலும் ஓட்டு அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதை நம்பி அப்பாவி ஏமாந்த தமிழக மக்களும் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்.


sankaranarayanan
பிப் 23, 2025 17:47

நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல இவர் என்ன சொல்ல வருகிறார் என்று இவருக்கே புரியவில்லயே மக்களுக்கும் புரியவில்லையே ஏனிப்படி பித்தலாட்டம் அரசியலில் கோமாளித்தனம் எதற்கு எவ்வளவோ பணிகள் மக்களுக்கு காத்துக்கிடக்கின்றன அவைகளை எல்லாமே ஒதுக்கி தள்ளிவிட்டுவிட்டு முமொழி கொள்கை என்று ஒரு செத்த பாம்பை கையிலேந்தி ஊர் ஊராக பிரச்சாரம் சேது தேர்தல் வருவதற்கு முன் செய்யம் பித்தலாட்டம் இது இது இனி பலிக்காது தன் வினை தன்னை சுடும் என்பதாகிவிடும் வேறு ஏதாவது இருந்தால் மத்திய அரசை குறை சொல்லலாம்


xyzabc
பிப் 23, 2025 00:16

மக்களை ஏமாற்ற தெரிந்த மாடல் அரசு. மக்கள் 200 ரூ வில் மயங்கி உள்ளனர்.


venugopal s
பிப் 22, 2025 23:09

மத்திய பாஜக அரசுக்கு நமது முதல்வர் சரியான பதிலடி, என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும், கொடுத்துள்ளார்!


Kasimani Baskaran
பிப் 22, 2025 22:47

இந்துக்களுக்கு எதிரியல்ல என்பார்கள் - திருப்பரங்குன்றத்தை வக்ப் சொத்து என்றால் ரசிப்பார்கள். அதே போலத்தான்- நாங்கள் எதிரியல்ல என்றால் எதிரியாக இருக்கிறோம் என்றதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Ramesh Sargam
பிப் 22, 2025 22:29

நாம் ஒரு நாள் Get Out Stalin என்று பதிவு போட்டதற்கே தலைவர் ரொம்ப இறங்கிவந்து நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல என்று கூறுகிறார்.


தாமரை மலர்கிறது
பிப் 22, 2025 21:47

வரி செலுத்த மாட்டேன் என்று திராவிட குஞ்சுகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. வரி செலுத்தாவிடில் ஜெயில் தான். ரொம்ப முரண்டு பிடித்தால், ரெண்டு பட்டாலியனை உள்ளே இறக்கி, இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை திராவிட குஞ்சுகள் அண்ணாசாலையில் பார்த்தால், அங்கநாடிகள் அனைத்தும் அடங்கி ஒடுங்கி போய் உட்கார்ந்துவிடும்.


பாரத புதல்வன்
பிப் 22, 2025 21:24

ஸ்டாலின் (அப்பா):நான் தொப்பி அணியாத முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன்.... உதவாநிதி (மகன்):நான் சிலுவை அணியாத கிருத்துவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...? அப்படின்னா ஒரிஜினல் அப்பா யாருப்பா?????? முஸ்லீம் அப்பாவுக்கு பிறந்தமகன் கிருத்துவன் ஒன்னுமே புரியிலே உலகத்துல


தாமரை மலர்கிறது
பிப் 22, 2025 21:17

உனது பேரனுக்கே வெளிநாட்டு பெண்ணோடு கல்யாணம் ஆகபோவுது. நீங்க அப்பாவா? கொள்ளு தாத்தா வா.


vbs manian
பிப் 22, 2025 21:14

இரு மொழி கொள்கை மட்டும் எதற்கு. ஒரு மொழி கொள்கையே போதும். அந்நிய மொழியான ஆங்கிலம் எதற்கு. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். மாணவர் திறமை இன்னும் பலமடங்கு உயரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை