உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறோம்: ஆணைய கூட்டத்தில் தமிழகம் உறுதி

காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறோம்: ஆணைய கூட்டத்தில் தமிழகம் உறுதி

சென்னை: ''காவிரி நீரை தேவை இல்லாமல், தமிழகம் வீணடிப்பது கிடையாது; சிக்கனமாகவே பயன்படுத்துகிறோம்,'' என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை செயலர் மணிவாசன் தெரிவித்தார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின், 35வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. தமிழகம் சார்பில், நீர்வளத் துறை செயலர் மணிவாசன், பன்மாநில நதிகள் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 'தமிழகத்திற்கு ஜூன் மாதம், 6.93 டி.எம்.சி., நீர், செம்டம்பர் மாதம் 9.14 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா அரசு நிலுவை வைத்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, மாத வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நீரை விடுவிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'கிடைக்கும் காவிரி நீரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தினார். கூட்டம் முடிந்ததும், வெளியே வந்த நீர்வளத் துறை செயலர் மணிவாசன், கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து, கூறியதாவது:தமிழகத்திற்கு ஜூன் மாதம் முதல் இன்று வரை, 145 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 247 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அணைகளில், தேக்கி வைக்க முடியாத வெள்ள நீரை, தமிழகத்திற்கு திறந்து விடுகின்றனர். இதை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத வாரியாக நீரை வழங்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, பிலிகுண்டுலுவில் நீரளவை தளத்தை கடந்து, வினாடிக்கு 11,000 கன அடி நீர் வருகிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருகிறது. இதனால், டெல்டா விவசாயிகளுக்கு, பாசனத்திற்கு எந்த பிரச்னையும் இருக்காது; குடிநீர் தேவையிலும் பிரச்னை இருக்காது. வரும் காலங்களில், மாத வாரியாக நீரை ஒதுக்கீடு செய்தால், எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக எந்த உத்தரவையும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பிறப்பிக்கவில்லை. நீரை சிக்கனமாக பயன்படுத்த, ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைக்கு அதிகமான நீரை, தமிழகம் வீணடிப்பது கிடையாது. தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்துகிறோம் என எடுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R. THIAGARAJAN
நவ 07, 2024 19:03

அரிய வாய்ப்பாக கிண்டி மைதானத்தை நீர் சேகரிப்பு அனையாக உரிய திட்டத்தை முறைப்படி நேர்மையாக கட்டி முடித்தால் சென்னை வெள்ள மற்றும் வறட்சி அபாயம் தீர்க்கப்படும்


ஆரூர் ரங்
நவ 07, 2024 20:08

குதிரைப் பந்தய திடலின் அளவு நீர்த்தேக்க அளவை விட மிகக் குறைவு. நெருக்கடியான பகுதி என்பதால் விரைவில் கழிவுகள் சேர்ந்து மினி கூவம் ஆகலாம். முதலில் இடம் யாருக்குச் சொந்தம் எனும் வழக்கு முடியட்டும்.


Lion Drsekar
நவ 07, 2024 15:06

இந்த ஆண்டின் ஜோக் ., எதை நம்மவர்கள் சிக்கனமாக செலவு செய்திருக்கிறார்கள், மழைநீர் வடிகால் செலவு எத்தினை கோடி, வேலை நடந்துகொண்டு இருக்கும் போதே நான் பதிவு செய்தேன், நான் நிருபர் இல்லை ஆகவே செய்திமட்டுமே லட்சத்தில் ஒன்றாக வாசகர் பதிவில் மறைந்துவிட்டது, , மழை நேர் தேகத்தில், சாக்கடை நீர் தேக்கத்தில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள், அதுவும் முன்பே இருந்த இடதுக்குப்பக்கத்தில், மற்றும் இருந்ததை இடித்து தள்ளி அதே பழத்தில் மழைநீர் தேங்கி இருக்கும்போது கான்கிரீட் போட்டு கட்டிய கால்வாய்கள், உலகத்தில் எங்காவது தேங்கிய நீரில் கான்கிரீட் போட்டு இதுபோன்ற வேலை நடந்திருக்குமா ? அதே போன்று கடும் கோடையிலும் சென்னையில் சாக்கடை நீர் தினம் இனம் பாலராக இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே இடம், அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஒரு பதம் போல், தி நகர் காவல் நிலைய எதிரில் மற்றும் திநகர் எம் எல் எ அலுவலக வாசலில் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது, அந்த அடைப்பை எடுக்காமல் லாரியை ஐந்து கழிவுநீர் வசதி இல்லாத இடங்களில் லாரி வைரத்து உறிஞ்சி எடுப்பது போல் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது, மழைக்காலங்களில் முதலில் கொப்பளித்து வெளியே வந்து மழைநீர் வடிக்காலில் கலந்து அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் கலப்பது இந்த நவீனமமாக்கப்பட்ட சாக்கடை, அடுத்து தயவு செய்து எல்லோரும் ஹொகேனக்கல் செல்ல வேண்டும், அங்கு தனியார்கள் தங்கள் நிலங்களுக்கு அந்த அணையில் ஓடிவரும் நீரினை எப்படியெல்லாம் உறுஞ்சுவீரார்கள் என்று பார்க்கவேண்டும், இப்படி எல்லா நிலைகளிலும் அடுக்கிக்கொண்டே போகலாம், இதுபோன்ற செய்டனிகளை படிக்க்கமால் இருப்பது நல்லது, எல்லாமே பொய்,l வந்தே மாதரம்


karthik
நவ 07, 2024 12:07

தண்ணீரை சேமிக்க இங்க என்ன செஞ்சு கிழிச்சு வச்சுருக்கானுங்க? ஆண்டாண்டுகாலமாக இருந்த ஏரி குளம் வாய்க்கால்களை பராமரிக்கவே துப்பில்லாமல் இருக்கு


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 10:17

இன்னமும் நாப்பது கருநா, 40 பெரியார் சிலை பார்சல், தண்ணியை சேமிக்க ஏரி, குளம் அணை கட்ட வழிய காணம் . இவனுங்க சிலை வைத்து பொதுமக்களின் தலை மீது கடன் வாங்கி வாங்கி சுமையை தான் அதிகரிப்பார்கள் , அது தான் திராவிட மாடல்


புதிய வீடியோ