உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக்குடன் என்ன தொடர்பு? அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!

ஜாபர் சாதிக்குடன் என்ன தொடர்பு? அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, திரைப்பட இயக்குனர் அமீரிடம், 12 மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, திரைப்பட இயக்குனர் அமீருக்கு, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், டில்லியில் உள்ள, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜரானார்.இவரிடம், போதை பொருள் கடத்தல் தொழிலில் தொடர்பு உள்ளளதா என்பது குறித்து, அதிகாரிகள், 12 மணி நேரம் விசாரணைசெய்தனர்.'ஜாபர் சாதிக்கின் கடத்தல் தொழில் சாம்ராஜ்யம் குறித்து எதுவுமே தெரியாது. ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து ஹோட்டல் துவங்கினேன். நான் இயக்கி வரும்,இறைவன் மிகப்பெரியவன்படம் தயாரிப்பு தொடர்பாகவே பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தேன்' என, அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'அமீரை கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். முக்கிய சாட்சியாக விசாரிக்கப்படுகிறார்.ஜாபர் சாதிக்கை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது, அமீர் அழைக்கப்படுவார். இருவரையும் நேருக்கு நேர் அமரச் செய்து விசாரிக்க உள்ளோம்'என்றனர்.

3 நாளில் சொல்வேன்

சென்னை திரும்பி உள்ள அமீர், 'விசாரணை குறித்து, மூன்று நாளில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி சொல்வேன். அதுவரை என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, வேண்டுகோள்விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

MARUTHU PANDIAR
ஏப் 04, 2024 19:53

இது மிகப் பெரிய நெட்ஒர்க் இவன் ஒரு முக்கிய லிங்க் விடக்கூடாது நாட்டை அழிக்க பொறப்பட்டுருக்கானுவ


மு. செந்தமிழன்
ஏப் 04, 2024 14:56

இவர் ஹிந்து மக்களுக்கும் மதத்திற்கும் எதிரானவர். உள்ளே வைத்து லாடம் கட்டி அணைத்து உண்மைகளையும் வரவழைக்க வேண்டும், உண்மையிலேயே இறைவன் மிகப் பெரியவன்


ஆரூர் ரங்
ஏப் 04, 2024 11:24

அடுத்து ஜாஃபர் தயாரித்த மங்கை பட இயக்குனரிடம் விசாரணை? கணவரையும் விசாரியுங்கள்


ramesh
ஏப் 04, 2024 10:39

எங்கயும் தலைமறைவு ஆகி விடாமல் இருந்தால் சரி


Vivekanandan Mahalingam
ஏப் 04, 2024 10:35

சமூகத்திற்கு தேவை இல்லாத.......... விரைவில் அனைத்தும் தெரிய வரும்


Barakat Ali
ஏப் 04, 2024 08:20

தேர்தலுக்குப்பின் இதைப்பற்றி பேச ஆளிருக்காது எது எப்படியோ பாஜகவுக்கு நல்ல வருமானம்


karupanasamy
ஏப் 04, 2024 06:33

இவனுடைய சூழ்சசியில் யுவன் சங்கர் ராஜா முற்றிலுமாக வீழ்ந்தார் ஜெய், ரஞ்சித் போன்றோர்களை இந்து மத தாக்குதலுக்கு பயன்படுத்தினான் இவன் வீசிய நோட்டுக்களை பெற்றுக்கொண்டு கிருத்திகா, உதயநிதி போன்றோர் இந்துக்களை இழிவு படுத்தினர்


NicoleThomson
ஏப் 04, 2024 06:10

போதை பொருள் கடத்த சொன்னவன் மிகப்பெரியவன் தான்


kumarkv
ஏப் 04, 2024 11:41

Correct


குமரி குருவி
ஏப் 04, 2024 05:46

கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வரும்.. காத்திருப்போம்...


Bye Pass
ஏப் 04, 2024 05:28

ரம்ஜான் பண்டிகை வீட்டில் சந்தோஷமாக கொண்டாட இறைவன் அருள் புரிவார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ