உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணிகள் நடக்காத 1050 கட்டுமான திட்டங்கள் நிலை என்ன: மத்திய அரசு விசாரணை

பணிகள் நடக்காத 1050 கட்டுமான திட்டங்கள் நிலை என்ன: மத்திய அரசு விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, பதிவு செய்யப்பட்டு பணிகள் எதுவும் நடக்காத, 1,050 கட்டுமான திட்டங்களின் நிலை என்ன, அதற்கான பின்னணி காரணம் குறித்த விசாரணையை மத்திய அரசு முடுக்கிவிட்டு உள்ளது.வீடு, மனை விற்பனையில் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் அமலுக்கு வந்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.

உயர்நிலை குழு

இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் தொடர்பாக, ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளதா என, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உயர்நிலை குழுவைஅமைத்துள்ளது.இக்குழுவினர் அனைத்து ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆய்வு செய்கின்றனர்.இந்த வகையில், சமீபத்தில் நடந்த இக்குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.இதில், பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அமைப்பு பிரதிநிதிகள், வீட்டுவசதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வு

இதில், 2017க்குமுன், 7,000 திட்டங்கள் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யப்பட்டன. இதில், 4,000 திட்டங்களில் பணிகள் முறையாக முடிக்கப்பட்டுள்ளன.பணிகள் முடியாத, 3,000 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததில், 1,050 திட்டங்களில் எவ்வித கட்டுமான பணிகளும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இத்திட்டங்களில், முதலீடு செய்த வகையில் நடந்த பண பரிமாற்றங்களின் பின்னணி குறித்து, விசாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக, இந்த கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.இக்குழு கூட்ட பரிந்துரை அடிப்படையில், இதில் எந்த முறையில், எந்த அமைப்பு வாயிலாக விசாரணை மேற்கொள்வது என்பது குறித்து மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
ஏப் 26, 2024 12:40

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலத்துக்கு பக்கத்தில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டிய அந்த இடத்தில முடிக்கப்படாத பல கட்டிடங்கள் அப்படியே இரண்டு தலைமுறையாக இருந்து வருகிறது ஒவ்வொருவர் ஒவ்வொரு கதையை கூறுவதைப்பார்த்தால், இப்படியும் இருக்குமா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும் அந்த வகையில் எதற்கும் படியாததால் முடிக்க முடியாத நிலையில் இருக்கிறது அன்றாடம் நாம் பார்ப்பதால் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இது போன்று எவ்வளவு இருக்கிறது என்று எல்லா கட்சிகளுக்கு மட்டுமே தெரியும் வந்தே மாதரம்


அப்புசாமி
ஏப் 26, 2024 08:00

அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து ஆளுக்கு ஒரு பி.ஹெச்.டி வாங்கி டாக்டராயிடலாம்.மத்தபடி வேற உபயோகமில்லை.


raja
ஏப் 26, 2024 06:07

ஜி சதுரம் ஒருவேளை பணியே செய்யாமல் கொள்ளை அடித்த பணத்தை வெள்ளை ஆக்கி இருபானுவோலோ அந்த ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டத்துக்கே வெளிச்சம்


Kasimani Baskaran
ஏப் 26, 2024 06:06

கள்ளத்தனம் செய்ய எளிதான துறை என்றால் அது ரியல் எஸ்டேட்தான் டிசதுரம் செய்த லீலைகளை அனைவரும் அறிவர் குப்பையள்ளிக்கொண்டு இருந்தவர்கள் கூட இன்று கோடிகளை அள்ளுகிறார்கள்


sankaranarayanan
ஏப் 26, 2024 05:23

திராவிட மாடல் அரசைக்கேட்டால் உடனே அவர்கள் ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய முப்பத்து எட்டாயிரம் கோடி பணம் கொடுக்காததால் கட்டுமான பனி முழுதடையவில்லை என்பார்கள் வேலிக்கு ஓணான் சாட்சி இதைக்கேட்டு பாமர மக்களும் அப்படியா என்பார்கள்


R Kay
ஏப் 26, 2024 03:49

ஊழல் மிக அதிகமாக நிகழும் துறை ரியல் எஸ்டேட் மற்றும் பத்திர பதிவுத்துறை cash transactions முழுவதுமாக தடை செய்தால்தான் கறுப்புப்பணம் இத்துறையில் விளையாடுவதை தடுக்க இயலும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஐந்தாயிரம் ருபாய் மட்டுமே cash ஆக தரப்படும் என்ற நிலை வரவேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ