உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா: கோர்ட் கேள்வி

சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா: கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது தான், எனினும் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.'யு டியூபர்' சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக பெண் போலீசார் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். பின், அவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.மேலும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.இதை எதிர்த்து சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். இதை தொடர்ந்து சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அமானுல்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த காரணத்தினால், தன் மகன் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 - 1ஏ, 21 மற்றும் 22ன் கீழ் பேச்சுரிமையை மீறும் செயல் என்றும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில் அரசு தரப்பு இவ்வளவு கடுமை காட்டக் கூடாது. நீங்கள் சரியாக செயல்பட வேண்டும். ஒருவரை தடுப்பு காவலில் வைப்பது மிகவும் தீவிரமான விஷயம். சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா?அவரது நடத்தை மன்னிக்க முடியாதது தான். ஆனாலும் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்க கூடாது?சவுக்கு சங்கரின் தாயார் மனு மீது, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். விசாரணை வரும் 18க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

subramanian
ஜூலை 16, 2024 21:51

நல்ல நீதிபதிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். தமிழகத்தின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலம் இப்போது நடக்கும் திமுக ஆட்சி.


பச்சைப்பன் கோபால் புரம்
ஜூலை 16, 2024 17:05

இவரை குண்டர் சட்டத்தில் மட்டுமேயல்ல ஒல்லியர் சட்டத்திலும் கைது செய்யலாம்.


Narayanan
ஜூலை 16, 2024 15:54

தேசியத்திற்கு அச்சுறுத்தல் இல்லை மாறாக திமுகவிற்குத்தான் அச்சுறுத்தல் கணம் கோர்ட்டார் அவர்களே .திமுகவின் நிர்வாகத்தை திறமையாக செய்யவில்லை என்று தொடர்ந்து உண்மையை சொல்லிவருவதால் எங்கே நமக்கு கஷ்டம் வந்துவிடுமோ என்று பயந்து சர்வாதிகாரராக ஆட்சி நடத்துகிறார்கள் . சகிப்புத்தன்மை இல்லாத இவர்கள் ஜனநாயகம் , கருத்து சுதந்திரம் அப்படி இப்படி இன்று பேசி வலம் வருகிறார்கள் . அரசின் மேல் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை திருத்தி கொண்டு நல்லாட்சி தரலாமே


Jai
ஜூலை 16, 2024 13:35

தேசிய பிரச்சனை பற்றி எல்லாம் திமுக அக்கரை இல்லை. அவர்கள் கட்சிக்கு எதிராக வேலை செய்தால் தீவிரவாதிகள் என கூட கூறுவார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:12

தேசிய பாதுகாப்புக்கெல்லாம் அச்சுறுத்தல் இல்ல .... எங்களை தோலுரிச்சு காட்டினார் ..... எங்க சாயத்தை வெளுத்தார் ..... பத்து வருஷம் கழிச்சு ஆட்சிக்கு வந்திருக்கோம் ...


rsudarsan lic
ஜூலை 16, 2024 11:12

Instead the honourable court could have ordered the punisher speedy disposl of tge cases namely talking ill of women and public servants and possession of ganja.


Mettai* Tamil
ஜூலை 16, 2024 10:51

அரசியல்வாதிகளின் ஊழலை வெளிகொண்டுவந்தால் , சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு மட்டும் இல்ல உலகத்துக்கே அச்சுறுத்தல் உள்ளது என்று சொல்வாங்க .......


VENKATESAN V
ஜூலை 16, 2024 10:20

அவர் பேசுவது எல்லாம் சரியா? கண்ணை மூடிக்கொண்டு திமுகவை எதிர்க்க கூடாது.


Anand
ஜூலை 16, 2024 10:37

கரெக்ட், ஒருவரை, ஒரு சமூகத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை அநாகரிகமாக பேச திருட்டு திராவிடத்திற்கு மட்டுமே உரிமை உண்டு.....


Saran
ஜூலை 16, 2024 10:14

not a threat to the nation but he is facing a life threat.


Sampath Kumar
ஜூலை 16, 2024 09:36

அமமாம் உள்ளது என்ன சேட்டை போறீங்க இந்த ஆளுங்க பத்திரிகை காரன் என்ற போர்வையில் செய்து உள்ள அட்டாலியம் கொஞ்சம் நாசம் அல்ல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை