உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்?

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்?

சென்னை: 'யு டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழக பெண் காவலர்களை தவறாகப் பேசியதாக, யு டியூபர் சவுக்கு சங்கர், மே 4ம் தேதி கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m5my2okk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சங்கரின் தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், பாலாஜியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரனிடம் வழக்கு மாற்றப்பட்டது.கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயச்சந்திரன், போலீசுக்கு சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு: காவல்துறை மீது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை. காவல்துறை அதிகாரிகளுக்கு சவுக்கு சங்கர் மீது தனிப்பட்ட முன்விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. அவர் மீது பெண் பத்திரிகையாளர் அளித்த புகார், வீரலட்சுமி என்பவரின் புகார், சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன் கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவாகின.சவுக்கு சங்கரை கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது, பலதரப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர் மீதான வழக்குகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த பின், அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைப்பது என்று முடிவானது. அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. மேலும், குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பான முழு ஆவணங்களும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தில் அடைத்து, பிறப்பித்த உத்தரவை அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளது. எனவே, மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

mindum vasantham
ஜூன் 09, 2024 14:46

திமுகவின் contract முறைகேடுகளை மிக நுணுக்கமாக பேசியவர் சவுக்கு சங்கர்


A P
ஜூன் 09, 2024 13:02

ஐயா, நீங்கள் சொல்கிற ஆளை நான் உத்தம சிகாமணி என்று சொல்லவில்லையே. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பாருங்கள். நான் மேலே குறிப்பிட்ட கயவர்களை, சிலரின் கண்களுக்கு உத்தமர்கள் என்று தோன்றினால் அந்த சிலர் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஊகிப்பது சிறு குழந்தைக்கும் எளிது ஐயா.


தமிழன்
ஜூன் 09, 2024 12:33

காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல./// ஒரு அரசு துறைக்கு தனி நபர் மீது எப்படி பழி வாங்கும் நடவடிக்கை இருக்க முடியும். அது அப்படி இல்லை என்று சொல்லும் போதே அப்படி தான் என அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது உளவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடிகிறது இல்லையா..? சாதாரண மக்கள் நமக்கே புரிகிறது என்றால், நீதிபதிக்கு புரியாமளா இருக்கும்.


தமிழன்
ஜூன் 09, 2024 12:30

நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது, பலதரப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்/// அந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளித்ததா? தேர்தல் விதி முறைகள் நடை முறையில் இருக்கும் போது எப்படி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியும். அல்லது போராட்டம் எப்படி நடந்து இருக்கும். காவல் துறை போராட்ட காரர்களை களைத்து அனுப்பி இருக்க vendaamaa?


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2024 11:02

இந்திய தலைவர்களை வாழ்நாளில் கருணாநிதி பேசாத பேச்சா..?? அவரை குண்டர் சட்டத்தில் அடைந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளேயே இருந்திருக்கணும்.


A P
ஜூன் 09, 2024 09:13

பாரத பிரதமரையும், தமிழகத்தை ஆளுகிற ஆளுநரையும் ஒருமையிலும், இந்து மத பெண்களை தாழ்வாகவும், ப்ராஹ்மணர்களை வாலாட்டும் மிருகங்கள் என்றும், முருகப் பெருமானை கீழ்த்தரமாகவும் மற்றும் நடராஜ பெருமானை காலித்தனமாகவும் பேசிய கயவர்களை, கண்டபடி பேசிய கண்மணிகள் மேலும் குண்டர் சட்டம் பாயவில்லையென தெரிகிறது. மனிதர்களில் யாரும் யாரையும் கீழ்த்தரமாக பேசுவது குற்றமே. குற்றம் செய்தவர்களின் மேல் சமமான பார்வை இல்லாத சமத்துவர்களோ இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. தெய்வம் இவர்களை தாமதமாகத்தான் தண்டிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Tirunelveliகாரன்
ஜூன் 09, 2024 10:15

செந்தில் பாலாஜிக்கு ஒரு சட்டம் அஜித் பவருக்கு ஒரு சட்டம் அதைத்தான் நீங்க சொல்றீங்க. இன்னும் நிறைய இருக்கு தல. இத மாதிரி தான் நம்ம நாட்டுல நடந்துட்டு இருக்கு. நல்ல கேளுங்க தல.


Mohamed Raffi
ஜூன் 09, 2024 10:29

சங்கீ நல்லா கதறு, சவுக்கு என்ன உத்தம சிகாமணியா?


raja
ஜூன் 09, 2024 09:13

அப்புறம் சுடாலின்னு சொன்னா குண்டர் சட்டம் தான் பாயும்...


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 09:09

என்ன இருந்தாலும் ஒரு யுடியூப் சேனல் பேட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் மீது இவ்வளவு வெறுப்பை விதைத்தால் அது பெரிய மரமாக வளர்ந்து திராவிடத்துக்கே உலை வைக்கும் நாளும் வரும். காவல்துறையை விமர்சித்ததற்கு குண்டர் சட்டம் என்றால் இந்தியப்பிரதமரை நாகரீகமில்லாத வகையில் கேவலயப்படுத்திய மந்திரிகளையும் குண்டர் சட்டத்தில் அடைக்கலாமே.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ