உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

சென்னை: 'அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை திருவல்லிக்கேணியில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது, கலாசாரத்தை பாதுகாப்பது குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போது தான், அதன் பயன் நமக்கு தெரியும். ஏற்கனவே ஸ்பெயின் போன முதல்வர் ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள்.

சி.பி.ஐ., வசம் ஒப்படையுங்கள்!

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். போலீசாரை கையில் வைத்திக்கும், முதல்வர் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

raja
ஜூலை 01, 2024 18:17

வேற எதுக்கு ஆட்டைய போட்டு அமுக்கிய 30000 கோடி பணத்தை அமெரிக்காவில் முதலீடு பண்ணத்தான்...


அப்புசாமி
ஜூன் 30, 2024 22:15

பாத்துப்.பேசுங்க முருகன் ஜீ. ஆத்மநிர்பார் கீழே சீன இறக்குமதி அதிகமாயிட்டே போகுது. அமெரிக்காவிலிருந்து தான் செமி கண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் சிப் ஆலைகளுக்கு முதலீடு வருது. ஜீ எத்தனை தடவை அமெரிக்கா போயிருக்கார்?


M Ramachandran
ஜூன் 30, 2024 19:25

இது என்ன கேள்வி ஒரே பதில் தப்பிக்க


Stalin Soundarapandian
ஜூன் 30, 2024 18:29

நடுவண் அரசின் அனுமதி பெற்றுத்தானே செல்கிறார் அனுமதி கொடுத்த உங்கள் அரசினைக் கேளுங்கள்


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:25

துபாய் பயணம் ரூ 6,600 கோடி லூலூ மால் சென்னையில் இன்னும் பல இடங்களில். ஸ்பெயின் பயணம் இன்னும் அதன் விவரம் சரிவர வரவில்லை அதேபோலத்தான் இந்த பயணமும். இதன் முக்கிய உள்காரணம் ஒன்று தான் கமிஷன் ரூ 6000 கோடி வரவு, இதை தாண்டும் போது இந்த பயணங்கள் தொடரும்.ஆகவே இது வரை வெறும் ரூ 18,000 கோடி தான் கமிஷன் அடிக்கமுடிந்திருக்கின்றது என்று அர்த்தம்.


raja
ஜூலை 01, 2024 19:52

சப்பான். போலந்து நாடுகளை விட்டு டீங்கலே...


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 14:49

ஒரு திராவிட மாடல் அரசை நடத்துவது எப்படி என ஜோ பைடனுக்குக் கற்பிக்க போவதில் என்ன தவறு. நினைவுப் பரிசாக கள்ளக்குறிச்சி அமிர்தத்தைக் கூட எடுத்துச் செல்லலாம்.


Anantharaman Srinivasan
ஜூன் 30, 2024 14:48

ஸ்டாலின் மாப்பிள்ளையுடன் சென்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிருபர்களை பார்த்ததும் முரட்டுதனமா கேள்வி கேக்கக்கூடாது


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 14:46

முடி..வா என்ன சொல்றீங்க?


Rajinikanth
ஜூன் 30, 2024 14:43

பிரதமர் போகும் வெளிநாட்டு பயணங்களுக்கெல்லாம் மக்களிடம் கணக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றாரா?


Sivasankaran Kannan
ஜூன் 30, 2024 14:40

கரப்பான் எந்த ஊருக்கு போனால் என்ன.. டுமிழ்நாடு திருட்டு திராவிட மாடல் நம்மை உருப்பட விடாது .. ஒரு குவாட்டர் சாராயத்திற்கும், கள்ள சாராயத்திற்கும், கஞ்சாக்கும், போதை மருந்துக்கும் அடிமைகளான நாங்கள் - டுமிழர்கள் , கேவலமான பிறவிகளாகி பல மாதமாகிறது... மீண்டும் திராவிட விடியல் தான் நம்மை போன்ற ஜந்துக்களுக்கு. - பெருமையுடன் திராவிட டுமிழன்..


மேலும் செய்திகள்



புதிய வீடியோ