உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? : திடுக் பின்னணி

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? : திடுக் பின்னணி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில், திருநெல்வேலி கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் நேற்று (ஜூலை 5) இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆறு பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கமாக ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி வைத்து இருப்பார். நேற்று இரவு காரில் துப்பாக்கியை வைத்திருந்த போது, ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ராங்கிடம் துப்பாக்கி இல்லை என்பதை கண்காணித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tjljp92f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பழிக்குப் பழி கொலையா?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், திருநெல்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

8 பேரிடம் விசாரணை

ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ டிரைவர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

MADHAVAN
ஜூலை 11, 2024 16:45

ஆருத்ரா பணம் பிரிக்குறதுல பிஜேபி கு தொடர்பு இருக்கு, இதும் அதுவும் மேட்ச் ஆகும்,


Manoharan
ஜூலை 08, 2024 09:19

இவர் என்ன தியாகியா. இவருடைய மரணம் எதிர் பார்த்த ஒன்று தான் .


Grmurugan Cfs
ஜூலை 13, 2024 18:01

ஏன், தியாகிதான் சாகவேண்டுமா, அதெப்படி முன்பே உங்களுக்கு தெரியும், பிஷப், மாநிலத்தலைவர், என்ன உனக்கு தக்காளி சட்டினியா


ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2024 04:40

கள்ளச்சாராய சாவுகளுக்கும், கட்சி தலைவர் கொலைக்கும் பொறுப்பு ஏற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். எதிர் கட்சி தலைவரா இருந்தால் எடப்பாடியை 10 தடவைகள் ராஜினாமா செய்ய சொல்லி பற்பல டூபாகூர் போராட்டம் செய்திருப்பார். அல்லக்கைகளின் ஜிங்சா சத்தம் காதுகளை கிழிக்கும்


venugopal s
ஜூலை 07, 2024 01:30

இரண்டு ரௌடிக் கும்பல் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தால் அதற்கும் மாநில முதல்வர் தான் பொறுப்பா? நல்லா வருவீங்க! விளங்கிடும் நாடு!


தமிழ்வேள்
ஜூலை 07, 2024 11:09

தமிழகத்தின் அத்தனை திருடன் கேடி களவாணி 420 கூலி பட்டாளம் பயல்களுக்கும் புகலிடம் திமுக..... தமிழகத்தின் தீராப் பெரு நோய் திமுக


Sridharan Venkatraman
ஜூலை 09, 2024 10:20

இதுக்கும் முன்னாடி எதிர்க்கட்சியா இருந்தப்ப இந்த ஞானம் கிடையாது. அறிவாளியே ....?


Natchimuthu Chithiraisamy
ஜூலை 06, 2024 16:35

இன்று இது சாதாரண செய்தி. ஆட்சி மட்டும் எடப்பாடியிடம் இருந்திருந்தால், மிக பெரிய செய்தி மாநில தலைவர் க்கு பாதுகாப்பு இல்லை பதவி விலக வேண்டும். என்று பெரிய போராட்டம் நடந்திருக்கும்.


Vaduvooraan
ஜூலை 06, 2024 14:48

பெரியார் வாழ்க..அண்ணா வாழ்க...தளபதி வாழ்க ,உதயநிதி வால்க..திராவிடம் வாழ்க...நல்லாட்சி வாழ்க 2026 தாண்டியும் வாழ்க!


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 14:25

கள்ளச்சாராய கொலை, வேங்கை வயல் பிரச்சினை போன்ற பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் காவல்துறைக்கு இதை கையாள நேரமும் திறமையும் கண்டிப்பாக இல்லை. ஆகவே நேரடியாக சிபிஐ இடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொள்ளலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 14:07

வடசென்னை ரவுடித்தனம் ஊரறிந்த ஒன்று. ரவுடிகள் துணையில்லாமல் அங்கு அரசியல் செய்ய முடியாது. பட்டை கொட்டை மந்திர ஒரு உதாரணம்.


Ashanmugam
ஜூலை 06, 2024 13:20

தமிழகத்தில் எப்போ திமுக ஆட்சிக்கு வந்ததோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். லஞ்சம், கமிஷன்,வெட்டு, குத்து,கொலைகள்,கொள்ளைகள், கற்பழிப்பு, பாலியபலாத்துகாரம் கொடுமைகள், ரவுடித்தனம் போன்ற கொடூர குற்றங்கள் ஓயவே ஓயாது. ஏனெனில் திமுகவுக்கு இதெல்லாம் அத்துபடி சர்வ சாதாரணம். திமுக மக்களை ஏமாற்றி அல்ப சலுகைகளை அறிவித்து ஏழை எளிய பாமர அடிதளத்து மக்களின் ஓட்டுக்களை வாங்கி, ஆட்சி பீடத்தில் அமர்ந்து இம்சை அரசன் புலிகேசி போல வாய் உதாரில் இரும்பு கரம் கொண்டு அடக்குவேன், கடுமையான தண்டனையை குற்றவாளிக்கு கொடுப்பேன் என வீர வசனம் பேசி ஒர் தமிழக மாநில முதல்வர் ஸ்டாலின் ஆட்சி புரிகிறார். இவருக்கு தமிழகத்தில் யார் குத்துயிர்,கொலையுருமாக செத்து மனைவி தாலி அறுந்தாலும் பரவா இல்லை. இவர் குடும்பம் நல்லா வாழவேண்டும். இவர் குடும்பத்தில் யார் தாலியும் அறுந்துபோக கூடாது. மித மிஞ்சிய சுகபோக உல்லாச வாழ்வு வாழவேண்டும் மற்றும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அணைவரும் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்பதுதான் திராவிட திமுக ஸ்டாலின் மாடல். செத்துமடிந்த குடும்பத்திற்கு ஓர் அனுதாபமான வாய் வார்த்தைகள் மற்றும் கருணை தொகை அவ்வளவுதான். மற்றபடி குடியம், குடியை அழித்து, தாலி அறுத்து நடுத்தெருவில் வரும் குடும்பத்திற்கு காரணியாக நடக்கும் கள்ளச் விஷசாராயம், மதுபான ஆலைகளை, மதுக்கடைகள் ஒழிய வே ஒழியாது. லஞ்சம், கொலைகள்,கொள்ளைகளும் ஒழியவே ஒழியாது. ஆக, 40/40க்கு ஓட்டு போட்ட மக்கள் அனுபவித்துத்தான் சாகனும். இது தமிழ்நாட்டின் தலைவிதி. மாற்றமுடியாது. ஏன்? வலுவான நேர்மையான எதிர்கட்சி கிடையாது. அதிமுக மகா வன்னியர் ஜாதி வெறி மற்றும் மகா கொள்ளை அடிக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி. எனவே மக்கள் வேற வழி இன்றி துன்பத்திலும் துயரத்திலும் கண்ணீராலும் கவலையிலும் மிதந்து வருகின்றனர்.


Minimole P C
ஜூலை 07, 2024 07:04

well said.


Iniyan
ஜூலை 06, 2024 13:11

இவர் கொலை செய்ய பட்டது மிகவும் தவறு. அதே சமயம் ஆர்ம்ஸ்ட்ரங் பெரிய தியாகி இல்லை. இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவரும் ஒரு கிரிமினல் பின்னணி கொண்ட ஒரு அரசியல் வாதி. ஆகவே இவர் எதிரிகள் இவரை கொலை செய்திருக்கலாம். மேலும் இவர் கொளத்தூர் தொகுதியில் போட்டி இட்டவர். எனவே கோபால புறம் குடும்பத்திடம் கூட விசாரணை நடத்த வேண்டும்


மேலும் செய்திகள்