உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோயிலில் முதல்வர் ஸ்டாலின் வழிபடுவாரா: எச்.ராஜா கேள்வி

பழநி கோயிலில் முதல்வர் ஸ்டாலின் வழிபடுவாரா: எச்.ராஜா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி: ''பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்த பின் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்'' என பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.பழநியில் அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் 20 சதவீத ஹிந்துக்கள் இருந்தனர். தற்போது 7 சதவீதம் உள்ளனர்.பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய காங்., கட்சியினர் தற்போது வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு எதிராக பேசவில்லை.பா.ஜ., மட்டுமே உலக ஹிந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது. கோயிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழநியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டால் முதலில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.சினிமா உலகை முதல்வர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் கோயில்களை தி.மு.க., மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம். தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள பிளவு மேயர் தேர்வில் வெளிப்பட்டு வருகிறது.கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோயில் பணத்தில் கல்லுாரிகள் கட்டி வருகின்றனர். கோயில் நிதியை கோயில் பணி தவிர மற்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது.கோயில் கும்பாபிஷேகங்கள் பக்தர்கள் நன்கொடையில் நடைபெறுகிறது. ஹிந்து விரோத தீயசக்திகளிடம் ஹிந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும். பழநி கோசாலை மாடுகள் பராமரிப்பு இன்றி பரிதாபமாக இருந்தது. அதை வெளிப்படுத்திய என்மீது வழக்கு பதிந்தனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

ஆரூர் ரங்
ஆக 09, 2024 16:41

21 ம் பக்க ஆட்கள் பழனிக்கு வரவேண்டாம். முருகனின் நிம்மதியை குலைக்க வேண்டாமே. மீறி வந்தால் வேல் பேசும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 15:12

இந்து கோயில்களில் மற்ற மதத்தவர் வழிபடவும் நுழையவும் அனுமதி இல்லை. பல இடங்களில் இந்து அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது.


Velan Iyengaar
ஆக 09, 2024 14:47

இது ஒரு காலி பெருங்காய டப்பா இதுக்கு மன்னிப்பு கேட்பது குலத்தொழில் .... அட்மின் மேலே பழி போடும் காமெடி பீசு ...... இது அவ்ளோ வொர்த்து இல்ல ..... அம்புட்டு தான் ......


Kanagaraj M
ஆக 09, 2024 13:26

தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று வழிபட சொல்லுங்கள். ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை எந்த மாதிரி உள்ளதென்று பார்ப்போம். பொய் பித்தலாட்டம் செய்த அரசியல்வாதிகளுக்கு தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தால் சங்குதான்.


krishna
ஆக 09, 2024 13:24

NEENGA VERA IVARU ANDHA KOVILUKKU PONA SELFIE EDUTHU KOVILAI AVAR KUDUMBA SOTHAAGA MAATRI VIDUVAAR.


sridhar
ஆக 09, 2024 13:10

கடவுளை omnipresent என்றும் சொல்வார்கள் , ஆனால் திமுகவோ முருகனை வெறும் தமிழ் கடவுளாக மட்டும் போனால்போகிறது என்று ஒப்புக்கொண்டு விழா எடுத்து பணம் சுருட்டுவார்கள் . கும்முடிப்பூண்டி தாண்டினாலோ ,பாலக்காடு போனாலோ முருகன் கடவுள் கிடையாதாம் , நாசமா போன திராவிட பகுத்தறிவு .


Ramesh Sargam
ஆக 09, 2024 12:43

ஒரு சிலர் அந்த முருகன் சந்நிதானத்தை, உறைவிடத்தை மிதிக்காமல் இருப்பது மிகவும் சிறந்தது. நான் யாரை சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 12:22

ஹிந்து பேர் வெச்சுக்கிட்டு எழுதுனா தப்பு இல்ல .....


இறைவி
ஆக 09, 2024 11:36

இங்கு கருத்து போடும் உபிக்களுக்கு சிந்தனை வறண்டு போய் விட்டது போலும். ஹெச் ராஜா அவர்கள் பட்டய படிப்பு முடித்த பட்டய கணக்காளர் Chartered Accountant. வசதியான குடும்பம். காரைக்குடியில் பெரிய பசு பண்ணை வைத்து நடத்துகிறார். சிறு வயது முதல் RSS தொண்டர். நீங்கள் கோடி ரூபாயை கணக்கின்றி கொடுத்தாலும் தொட மாட்டார். ஏனென்றால் RSS வளர்ப்பு அப்படி. தேச சேவையே முக்கியம் கை, வாய், மனம் சுத்தம் முக்கியம். குடும்பம் அதன் பின்னர்தான். கழக கண்மணிகளுக்குத்தான் அடுத்தவன் பணத்தையும் அரசு பணத்தையும் ஆட்டய போடும் பழக்கம்.


Kumar Kumzi
ஆக 09, 2024 11:17

... சீடன் எப்பிடி ஹிந்து கடவுளை வணங்குவான் ஒட்டு பிச்சை கிடைக்காதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை