உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது "குண்டாஸ்" பாயும்: போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது "குண்டாஸ்" பாயும்: போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், (வயது 52). சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல வந்தவர்கள், அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைய முயன்ற, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை கிராமத்தைச் சேர்ந்த பாலு, (வயது 39), சென்னை குன்றத்துார் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 பேரை கைது செய்தனர். ரவுடி திருவேங்கடம், நேற்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது 10 பேர் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர்.இந்நிலையில், இன்று(ஜூலை 15) சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

karunamoorthi Karuna
ஜூலை 16, 2024 08:36

ஏற்கனவே குண்டு பாய்ந்து ஒருவன் செத்து விட்டான் மீதி இருக்கும் கைதிகள் தப்பி ஓடினால் குண்டாஸ் பாயும்


sankaranarayanan
ஜூலை 15, 2024 20:48

ரவுடிகள் என்று பெயர் சூட்டியபின் அந்த ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்கும் நாடு உலகிலேயே நமது நாடுதான் இதனால்தான் இப்போது ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஒரு காலத்தில் போலீசு காரர்களைவிட ரவுடிகளின் எண்னிக்கை அதிகரித்துவிடும் பிறகு ரவுடிகள் போலீசை கண் காணிப்பார்கள்


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2024 20:17

போட்டு தள்ளு.. சும்மா போட்டு தள்ளு. உபியில் அருண் போன்ற அதிகாரிகளை வைத்து தான் யோகி சட்டஒழுங்கை மேம்படுத்தினார். ஸ்டாலின் ரவுடிகளை உச்சிமோர்ந்து கொஞ்சியதன் விளைவாக தமிழகம் ரவுடி மாநிலமாக மாறிவிட்டது. அருண் போன்ற அதிகாரிகள் தேவை.


Rpalnivelu
ஜூலை 15, 2024 20:15

கழகன்ங்கள் பிடியில் காவல் துறை கட்டெறும்பாகி விட்டது. சிரிப்பு போலீஸ்


தமிழன்
ஜூலை 15, 2024 17:37

ஒரு ரிலாக்ஸ் ஆக இருக்கட்டும் என இந்த பாடலை பதிவு செய்கிறேன்.. /// பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு சில யானைகள் பூனைகள் ஆகும் சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சில பூனைகள் யானைகள் ஆகும் அரிச்சந்திரன் துன்பம் கொண்டான் அது ரொம்ப பாவம்தான் ஒரு பொய்யை சொல்லி இருந்தால் அது கூட நியாயந்தான் பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை /// புரிந்தவர்கள் புத்திசாலிகள் ////


G Mahalingam
ஜூலை 15, 2024 17:37

கூலி படைக்கு ஆணையிட்டவனை குண்டாஸ் பாயுமா. அதுவும் திமுகவினர் மீதுதான் சந்தேகம் வருகிறது.


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:27

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது "குண்டாஸ்" பாயும் அவர்கள் உண்மையான குற்றவாளிகளான திமுகவினரை காட்டிக்கொடுக்கும் போது இல்லை திருவேங்கடம் என்கவுன்டேர் மாதிரி நடக்கும் :


தமிழன்
ஜூலை 15, 2024 17:23

பதவி ஏற்ற உடன், முதல்வருக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி பணியாற்றுவேன் என்று சொன்னார்.. அப்போ மக்களுக்கு புரிந்ததா தெரியவில்லை.. இப்போ மக்களுக்கு புரிந்து இருக்கும்... /// புரிந்தவர்கள் புத்திசாலிகள்


தமிழன்
ஜூலை 15, 2024 17:21

ரவுடி களுக்கு புரியற மொழியில் என்று பதவி ஏற்ற உடன் சொன்னார் .. அந்த மொழி இது தானா...?


Shekar
ஜூலை 15, 2024 16:40

அப்போ சவுக்கு சங்கரும்,குண்டாஸ், வாழ்க ஸ்காட்லாந்து போலீஸ்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை