உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் ஊழியர் பிரச்னை தீருமா? 24ல் சமரச பேச்சு

பஸ் ஊழியர் பிரச்னை தீருமா? 24ல் சமரச பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேலைநிறுத்த நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கு, 24ம் தேதி சமரச பேச்சு நடத்த வரும்படி, தொழிலாளர் நல ஆணையத்தின் இணை கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிந்தும், புதிய ஒப்பந்தம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்; ஓய்வூதியர்களின், 103 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும் என, போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி உள்ளன. அரசு கண்டு கொள்ளாததால், போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன; முறைப்படி நோட்டீசும் அளித்துள்ளன.இந்நிலையில், சமரச பேச்சு நடத்த, வரும் 24ம் தேதி பிற்பகல் 4:00 மணிக்கு, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர் நல ஆணையத்தின் இணை கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.ஏற்கனவே, கடந்தாண்டு டிச., 27, இந்தாண்டு ஜன., 3, 8, 19; பிப்., 7, 21, மார்ச் 6 ஆகிய தேதிகளில் சமரச பேச்சு நடந்தும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஜூலை 15, 2024 18:34

பொள்ளாச்சி, கரூரை தவிக்க விட்டு பெங்களூர் சென்று பேருந்து பாடி அமைப்பதன் நோக்கம் என்ன? இலவச பேருந்தை இயக்க மக்கள் பிரதிநிதிகள் தானாக முன்வர வேண்டும்... தகுதி அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் வேலை நிறுத்தம் பற்றிய பேச்சு இருக்காது


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 15, 2024 14:15

ஈயம் பூசவே கூடாது.இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் அதுவரை இப்படி அரசு ஊழியர்கள் காட்சி அதிகம் தென்படும்.அப்புறம் தேர்தல் முடிந்து செய்வோம் என்று மீண்டும் வாக்குறுதி.


Kasimani Baskaran
ஜூலை 15, 2024 05:16

பேருந்துகளின் நிலை ஊழியர்களின் நிலையை விட படு பரிதாபமாக இருக்கிறது. இரண்டுக்கும் தீர்வு தனியார் மயமாக்குவதுதான். ஆக போக்குவரத்துத்துறை படு குழிக்குள் விழ இருக்கிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை