உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடக அரசிடம் இருந்து 40.43 டி.எம்.சி., தண்ணீரை பெற முயற்சிக்குமா தமிழக அரசு?

கர்நாடக அரசிடம் இருந்து 40.43 டி.எம்.சி., தண்ணீரை பெற முயற்சிக்குமா தமிழக அரசு?

தஞ்சாவூர்: காவிரி நதி நீர்பங்கீடு,நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் மாதாந்திர அடிப்படையில், பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் இருந்து தமிழகத்திற்கு, கர்நாடக மாநிலம் 192 டி.எம்.சி., வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பிறகு, கர்நாடக அரசு குடிநீருக்காக அதிக அளவு ஒதுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதனால், 14.75 டி.எம்.சி,. தண்ணீர் தமிழகத்திற்கு குறைந்து, 167.25 டி.எம்.சி., கிடைக்க பெற்று வருகிறது. இதில், இந்தாண்டு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., என மொத்தம் 40.43 டி.எம்.சி., தண்ணீரை இதுவரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனை தமிழக அரசு கேட்டு பெற்றால் ஒரு போக சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும். பிறகு வடகிழக்கு பருவமழையை கொண்டு சாகுபடியை முடித்து விடலாம். எனவே, கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் மெளனம் கலைக்க வேண்டும் என த்து கேட்டு உரிய நீரை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள அனைத்து அணைகளும் 90 சதவீத நீர் நிரம்பி விட்டது. காவிரியில் துணை நதிகள் அனைத்தும் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது.ஜூன், ஜூலை மாதத்திற்கு மட்டும் 40 டி.எம்.சி., தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும்.இதனைப் பெற்று விட்டால் ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை பாதுகாத்து விட முடியும். எனவே, உரிய நீரை உடனடியாக பெற தமிழக முதல்வர் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.மேகதாது அணை கட்டுவதற்கு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கர்நாடக முதல்வர் சித்ராமையா வழங்கியது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக முதல்வர் இது குறித்து வாய் திறக்கவுமில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், காவிரியில் பெற்ற உரிமைகள் பறிபோகும் பேராபத்தை ஏற்பட்டு உள்ளது. முதல்வர் மௌனத்தை கலைத்துவிட்டு, போர்க்கால அடிப்படையில் காவிரி நீரை பெற்று சம்பா சாகுபடி மேற்கொள்வது குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னோடி விவசாயி சீனிவாசன்: டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யபட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன்,ஜூலை மாதத்திற்கான உரிய நீரை கேட்டு பெறாமல் தமிழக அரசு துாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளுக்கு மெயில் மூலம் கடிதம் எழுத வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் கர்நாடக அரசிடம் தண்ணீரை கேட்டு பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 07, 2024 06:02

வான் முகில் வழாது பெய்து மழை வளம் சுரந்தால் கர்நாடகம் வேறு வழியின்றி தண்ணீர் சேமிக்க முடியாமல் போனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும் அதுவும் கர்நாடகாவில் உள்ள கழிவு நீரினையும் சேர்த்து திறந்து விடும். மக்கள் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதானால் நாற்பதுக்கு நாற்பது கொடுத்து விட்டு இப்போது தமிழக அரசு தண்ணீர் கேட்க வேண்டும் என்றால் எப்படி திமுக அரசு கேட்கும். அதுவும் மதிப்பிற்குரிய மாண்புமிகு ஒன்றிய எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடையவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உற்ற நண்பர். இவர் எப்படி கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பார்? இவர் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் வேண்டுமானால் தினம் போராட்டம் அறிக்கை என்று கேட்பார். விவசாயிகள் துடிக்கிறார்கள் என்று கதறுவார். இப்போது எப்படி இவரால் கேட்க முடியும்.ரேசனில் அரிசி துவரம்பருப்பு இரண்டு மாதங்களாக தரவில்லை என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி கூட இரண்டு மாதம் தரவில்லை என்கிறார்கள். இப்படி ஏட்டிக்குப் போட்டி அரசாங்கம் நடத்தினால் என்ன செய்வது? நாற்பதுக்கு நாற்பது வேறு. நூறு சதவீதம் பாஸ் மார்க்.

Kasimani Baskaran
ஜூலை 07, 2024 04:17

வருண பகவான் மனது வைத்து கர்னாடக அணைகளில் நீர் நிரம்பினால் வேறு வழியில்லாமல் திறந்து விட்டால்தான் உண்டு. தமிழகத்துக்கு விரோதமான திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு நீர் பகிர்மானத்தில் நீதி கிடைக்காது.

rau
ஜூலை 07, 2024 02:13

During election time farmers organisations vote for Dravidian parties and the farmers leaders are brain washed and corrupted.

Murugesan
ஜூலை 07, 2024 00:43

தமிழகத்தின் சாபக்கேடு அயோக்கிய திமுக காங்கிரஸ்காரனுங்க ஆட்சியில, தமிழகத்திற்கு துரோகம் தான், இரண்டு கட்சியும் இந்தியாவின் அவமானச்சின்னங்கள் ஊழல்ல உழல்கின்ற கொலைகார கொள்ளைக்கார, பதவி பணத்திற்காக அலைகின்ற சுயநலவாத கூட்டாளி மிருகங்கள்

ديفيد رافائيل
ஜூலை 06, 2024 22:34

கர்நாடக அரசுக்கு வேற வழியே இல்லை. காவிரியில் தண்ணீர் அதிகமாயிடுச்சுன்ரு கேள்விப்பட்டேன்

pandit
ஜூலை 06, 2024 22:17

மணல் கொள்ளை நடக்கும்வரை முடியாத காரியம்

sai venkatesh
ஜூலை 06, 2024 18:25

விடிய arasu

மேலும் செய்திகள்

புதிய வீடியோ