உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணிடம் அத்துமீறிய தொழிலாளி கொலை

பெண்ணிடம் அத்துமீறிய தொழிலாளி கொலை

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, சேதுராமன், 42. மனைவி இறந்ததால் மகன், மகள்களை, தன் உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, அருகிலுள்ள தண்டலம் மேட்டு சாலை பகுதியில் கூலிவேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே துாங்கிய கணவனை இழந்த, 50 வயது பெண்ணிடம், சேதுராமன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்பெண் கூச்சலிட்டதால், அப்பகுதியினர் கூடி, சேதுராமனை தாக்கினர். இதில் மயங்கிய அவரை, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்