உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொன்னீங்களே... செஞ்சீங்களா எதிர்வினையாற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை!

சொன்னீங்களே... செஞ்சீங்களா எதிர்வினையாற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை!

திருப்பூர்: பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், கடந்த, 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள், மாதம், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில், 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். உடற்கல்வி - 3,700, ஓவியம் - 3,700, கம்ப்யூட்டர் அறிவியல் - 2,000, தையல் - 1,700 ஆசிரியர்கள் உட்பட இசை, தோட்டக்கலை, கட்டட கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:

தி.மு.க., தேர்தல் அறிக்கை எண்:153ல், 'அரசின் அனைத்து துறைகளிலும், 10 ஆண்டுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்கள், நிரந்தரம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதி எண். 181ல், 'பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என தனியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, 2021, செப்,. 16ல் நடந்த அரசுத்துறை செயலர்கள் மட்டத்திலான ஆய்வுக்கூட்டத்தில், 'தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக்க வேண்டும்' என முதல்வர் கூறினார்.தேர்தலுக்கு முன், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 2021 பிப்., 1ல், தர்மபுரி மற்றும் 6ம் தேதி, கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 100 நாட்களில் நிறைவேற்றப்படும்' என நம்பிக்கை ஏற்படுத்தினார்.இவ்வாறு பகுதி நேர ஆசியர்களின் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தியும், இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிட்டால், அடுத்தாண்டு தேர்தல் வந்துவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அந்த ஸ்டாலின் கேட்டார்...இந்த ஸ்டாலின் செய்தாரா?

கடந்த, 2021 பிப்.,14ம் தேதி, மயிலாடுதுறையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்,' பிரசாரத்தில், ஸ்டாலின் என்ற பெயர் கொண்ட பகுதி நேர ஆசிரியர், 'தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தார். 'அந்த ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த ஸ்டாலின் நிறைவேற்றுவேன்,' என, நம்பிக்கையளித்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது, எனவும், செந்தில்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

SVR
மார் 02, 2025 18:43

தேர்தல் அறிக்கையில் அச்சடிக்கலப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் அரசியல் அமைப்பு சட்டப்படி இல்லையே. சிலவற்றையெல்லாம் காலாகாலத்துக்கும் அரசியல் காரணங்களுக்காக சொல்லிக்கொண்டு தான் இருப்போம். அதை யாரும் கண்டும் கேட்டும், காணாமல் கேட்காமல் போய் விட வேண்டும். இதையெல்லாமா மக்களுக்கு நியாபகம் செய்து கொண்டிருப்பது? மக்களுக்கு அப்பப்போ போதை தெளியும். அப்புறம் ஏறி விடும். அப்போது திராவிட அரக்கர்களுக்கு மிக்க மகிழ்ச்சி கிட்டும். பதவிக்கு வருவார்கள். நினைத்ததை எல்லாம் செய்துவிட்டு சட்ட பேசுவார்கள். இதைத் தான் கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திராவிட அரக்கர்கள் என்றும் இந்நாட்டு மெயின் ஸ்ட்ரீமில் இருந்த மாதிரி சரித்திரம் இல்லை. எல்லாம் பம்மாத்து வேலை.


Devasigamani Samuel
மார் 03, 2025 17:38

பிரதமர் மோதியும் 150000‌‌ தர்ரேன்‌ எனறுதான்‌சொன்னார்‌ தந்தாரா இதற்காக வழக்காட முடியுமா. ‌இவர்கள்‌என்ன கடவுளா‌‌ நம்மைப்போலதானே.


c.mohanraj raj
மார் 02, 2025 13:29

உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அவர் நெஞ்சில் பசுமையாக உள்ளது தமிழகத்தில் நிறைவேற்று இடமில்லை ஆகவே அவர் நெஞ்சில் வைத்துள்ளார் இந்த ஆட்சி வேண்டும் என்று நீங்கள் தானே கொண்டு வந்தீர்கள் சில சதிகளை செய்தும் கூட அனுபவியுங்கள்


HoneyBee
மார் 02, 2025 12:13

அட கூமுட்டகளே .. இன்னுமா என்ன நமபுறீக.. அடுத்த தேர்தல் வரும் போது இதைவிட அதிகமா வாக்குறுதிகள் கொடுப்போம். நீங்க குவார்ட்டர் பிரியாணிக்கு ஆசை பட்டு ஒட்டு போட்டு மறுபடியும் செத்து மடிவீக... இதுதான் விடியல்


Kjp
மார் 02, 2025 12:05

அப்போ வந்தது மேக்கப் இல்லாத ஸ்டாலின்.இப்போ இருப்பது விக் உள்பட ஃபோட்டோ சூட் மேக்கப்போட இருக்கும் ஸ்டாலின்.அதனால் உங்கள் கோரிக்கை இப்போது உள்ள ஸ்டாலினிடம் செல்லாது.


Barakat Ali
மார் 02, 2025 10:44

திருவிளையாடல் தருமி : எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும் ....


GSR
மார் 02, 2025 10:38

ஓட்டு போட மூளையை உபயோகிக்க வேண்டும் என்று தானே 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் ஓட்டு உரிமை தரப்பட்டது ? மூளையை உபயோகிக்காமல் முடிவெடுத்து ஓட்டு போட்டால் ?......


Barakat Ali
மார் 02, 2025 10:34

தமிழகத்தின் ஒரு பெரிய எழுத்தாளர் குறிப்பிட்டது ..... வரைவின் மகளிர் சம்பாதிக்க ஆயிரம் சொல்வார்கள் .... ஊரிலுள்ள செல்வந்தர்கள் அனைவரிடமும் நீதான் என் மன் மதன் என்பார்கள் ...... அதை நம்பி ஒவ்வொருவரும் கொட்டிக் கொடுப்பார்கள் .... பலரிடம் லவட்டிய பிறகு அனைவருக்கும் அல்வாதான் ..... பிறகு வேறு ஊர் செல்வார்கள் ..... இந்தச்செய்தி படித்தால் ஏனோ அந்நினைவு வருகிறது .....


rajan_subramanian manian
மார் 02, 2025 09:29

கவலை வேண்டாம். டிஎம்கே சொன்னதையே சொல்லும் ஜோசப் கட்சி இந்த முறை ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று பீலா விடுவார். எனவே வோட்டை அதிமுக, ஜோசப் கட்சி என்று பிரித்து போட்டு மீண்டும் உதய நிதி தலைமையில் டாஸ்மாக் ஆட்சி மலர உங்களால் ஆன உதவிகளை செய்யவும்.


raja
மார் 02, 2025 09:04

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் தான் செய்யலாம்னு பழமொழி ஆனா இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற ஒத்த டோலக்கோட திருட்டு ரயில் ஏறி வந்த கட்டுமரத்தின் தத்தி கோமாளி கொள்ளை கூட்ட தலைவன் வாய திறந்தாலே பொய்...அதையும் நம்பி இந்த அடிமை தமிழன் நம்பி ஒட்டு போட்டு இப்போ ஏமாந்து போனானுவோ...


பாமரன்
மார் 02, 2025 08:58

டீம்காவ விடுவோம்... அவனுவ மட்டுமே அயோக்யனுவ ஸ்வாஹான்னு பகோடாஸ் பார்த்துப்பாங்க... ஆனால் இந்த அரசு பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்களை முதலில் கண்ட்ரோல் பண்ணனும்... இவிங்க குழந்தைங்க அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்கனும்... குறுப்பிட்ட கோர்ஸ் அரசு பள்ளிகளில் இல்லாத பட்சத்தில் வேறு பள்ளியில் பயிலலாம்... இல்லைன்னா பாதி சம்பளத்தை கட் பண்ணிடனும்... அதேபோல் அரசு ஊழியர்கள்...அரசு சம்பளத்தை வாங்கும் யாரும்.... கெவுனர் முதல்வர் உட்பட யாரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே வைத்தியம் பார்க்கனும்னு கூட சட்டம் கொண்டு வரனும்... அப்ப தெரியும் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனை எப்படின்னு ...வெளிநாட்டில் கிடைப்பது எல்லாம் ஜீஜூபி அப்படின்னு.... இதை உடனே தமிழ் நாட்டில் செய்ய சொல்லலாமே கெக்கேபிக்கெங்க போற பகோடாஸ் முதலில் நாட்டின் பாமர மக்களுக்காக மட்டுமே ஆட்சியில் இருக்கும் அம்பத்தாறு இஞ்ச் கிட்ட நாடு பூராவும் செய்ய சொல்லனும்... ஏன்னா ஏற்கனவே இங்கு ஊரில் பகோடா கம்பெனிக்கு ஓட்டு போட்டுட்டு நாஸ்தி பண்ணி வச்சிட்டு தமிழ் நாட்டில் வேலை செய்ய மருத்துவம் பார்க்க கல்வி கற்க வரும் பீஸ்கள் மிகவும் அதிகமாக உள்ளன... செய்வேளா / சொல்வேளா.... இல்லைன்னா வெறும் டீம்கா ஒயிக ஸ்வாஹா மட்டுமா...???


Svs Yaadum oore
மார் 02, 2025 09:46

தமிழ் நாட்டில் இவ்வளவு முன்னேறிய மாநிலத்தில் இது போல பிரச்சனை எதுவும் கிடையாது ...அதெல்லாம் படிக்காத ஹிந்திக்காரன் வடக்கன் மாநிலத்திலதான் பிரச்சனை .....மேலும் வடக்கே பப்பு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் எந்த பிரச்னையும் கிடையாது ... ..திராவிடம் சமூக நீதி என்றால் வடக்கன் வெத்துவேட்டு என்று நினைச்சுட்டானா?? ...


Kasimani Baskaran
மார் 02, 2025 14:17

ஒரு பக்கம் எல்லாம் அரசாங்கம் செய்யக்கூடாதுன்னு ஒப்பாரி.. அடுத்த பக்கம் தனியாரும் சம்பாதிக்க வேண்டும் என்று கல்வியையே தாரை வார்ப்பது.. கொள்கை இல்லாமல் எது செய்தாலும் ஒப்பாரி வைப்பது. தட் இஸ் ப்ளடி திராவிடம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை