மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, கர்த்தநாதபுரத்தில், சக்திவேல் என்பவர் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, கோவில் திருவிழா, வீட்டு விசேஷங்களுக்காக, வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.பட்டாசு தயாரிக்கும் பட்டறை, கர்த்தநாதபுரத்தில், வயல்வெளியின் மையப்பகுதியில் உள்ளது. நேற்று, சக்திவேல் தம்பி சதீஷ்குமார், 35, அருண்குமார், 19, பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மதியம், 2:00 மணிக்கு, அந்த இடத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. அக்கம்பக்கத்தினர், மன்னார்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடல் முழுதும் எரிந்த நிலையில் சதீஷ்குமாரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சதீஷ்குமார் இறந்தார்.காயமடைந்த அருண்குமார், திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago | 4
14 hour(s) ago | 1
15 hour(s) ago