மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ளக்காதலி ராஜேஸ்வரியை 32, அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய கள்ளக்காதலன் குமாருக்கு 28, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆலங்குளம் அருகே லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முத்தையா,37, இவரது மனைவி ராஜேஸ்வரி, 32, இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.அதே பகுதியை சேர்ந்த குமாருக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஊரை விட்டு வெளியேறி துாத்துக்குடியில் வசித்தனர். 2017 ஜூலை மாதம் இருவரும் தங்கள் ஊர் கோயிலில் சுவாமி கும்பிட லட்சுமிபுரம் வந்தனர்.அப்போது ராஜேஸ்வரி தனது குழந்தைகளை தன்னுடன் அழைத்து செல்வது தொடர்பாக குமாரிடம் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ராஜேஸ்வரியை அடித்து கொன்று அப்பகுதி கிணற்றில் குமார் வீசியுள்ளார்.ஒரு வாரம் கழித்து கிணற்றில் மிதந்த ராஜேஸ்வரியின் உடலை போலீசார் மீட்டு தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.பின்னர் போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியை குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago