உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  1 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு:   ரூ.1,034.73 கோடி இழப்பீடு

 1 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு:   ரூ.1,034.73 கோடி இழப்பீடு

சென்னை: மாநிலம் முழுதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத் வாயிலாக, ஒரு லட்சத்து, 3,366 வழக்குகளில், 1,034.73 கோடி ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டன. நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, தமிழக சட்டப் பணிகள் ஆணையக் குழு நிர்வாக தலைவர் ஆர்.சுரேஷ்குமார் உத்தரவின்படி, நேற்று சென்னையில் லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதி மன்றத்தில் ஐந்து அமர்வு களும், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில், இரண்டு அமர்வு களும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்தன. நீதிபதிகள் தலைமையில், மாநிலம் முழுதும் 516 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந் த அமர்வுகள், நிலுவையில் இருந்த, 90,921 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத, 12,445 வழக்குகள் என, மொத்தம் ஒரு லட்சத்து, 3,366 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளன. இதன் வாயிலாக, 1 ,034.73 கோடி ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, என, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினரான, உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில், 6.67 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ