1 லட்சம் சதுர அடியில் அறிவுசார் கோபுரம்
சென்னை: சர்வதேச, தேசிய அளவில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்கள் தம் அலுவலகம், ஆராய்ச்சி மையத்தை அமைக்க, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அங்கு, 13 ஏக்கரில், 1 லட்சம் சதுர அடியில் அறிவுசார் கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கும், அறிவுசார் நகரம் அமைக்கவும், ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டிட்கோ' டெண்டர் கோரியுள்ளது.