வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குவாட்டரும், கோழிப் பிரியாணியும் கொடுத்தால் கூட்டம் பயங்கரமாகச் சேருமுள்ள.
சென்னை:வடகிழக்கு பருவ மழையையொட்டி, பருவகால நோய்களை தடுக்க, சென்னையில் 100 இடங்கள் உட்பட, 1,000 இடங்களில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. சென்னை மயிலாப்பூர், சமுதாய நலக்கூடத்தில் நடந்த மருத்துவ முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:மழைக் காலங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தி, சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. முகாமில், அதற்கான சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். மழைக்கால குறைகளுக்கு, '104' மற்றும் '19133 ஆகிய எண்களில், பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை' என்கிறார். அவர் எந்த மருத்துவமனையிலும் ஆய்வு செய்யவில்லை. அவர் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் தொகுதியில் கூட, ஆய்வுக்கு வருவதில்லை. சென்னையில் மழை பாதிப்பை தடுக்க, அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆனால், கனமழை காரணமாக, குறைந்த அளவிலான மக்கள்தான், முகாமில் பங்கேற்றனர். மக்கள் வருகை குறைவு காரணமாக, பெரும்பாலான முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
குவாட்டரும், கோழிப் பிரியாணியும் கொடுத்தால் கூட்டம் பயங்கரமாகச் சேருமுள்ள.