வேலுாரில் 101 டிகிரி வெயில்
சென்னை: வேலுாரில் நேற்று மாலை நிலவரப்படி, 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட, 3 டிகிரி அதிகம். இதேபோல, கரூர் பரமத்தியில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட, 2.5 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.