உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கற்பித்தலை தாண்டி கவனிக்கணும் 108 பணிகள்; வைரலாகும் பட்டியலால் சர்ச்சை

கற்பித்தலை தாண்டி கவனிக்கணும் 108 பணிகள்; வைரலாகும் பட்டியலால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் கற்பிக்கும் நேரம் சுருங்கி, கற்பித்தல் அல்லாத விஷயங்கள் குறித்து ஆவணப்படுத்துவதில் 108க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.கல்வித்துறை செயல்பாடுகள் மீது சமீபகாலமாக அரசியல் ரீதியான விமர்சனம் எழுந்து வருகிறது.குறிப்பாக எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டி, வாசிப்பு இயக்கம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கரியர் கைட்னஸ், ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல், 21 வகை நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஹைடெக் லேப், பதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் தடையின்றி அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் தொடர வேண்டும் என்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டப்படுகிறது.இதுதவிர பல்வேறு மத்திய அரசு நிதி ஆதாரங்களை பெறுவதற்கான மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.இதுதவிர பெரும் சவாலாக உள்ள 'எமிஸ்' பணிகளாலும் ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். இதற்கிடையே பணிச்சுமையை ஏற்படுத்தும் கற்பித்தல் அல்லாத பணிகளையும் ஆசிரியர்கள் மீது திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட கற்பித்தல் அல்லாத பணிகள் குறித்த விரிவான லிஸ்ட் ஆசிரியர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் கற்பித்தல் பணி மட்டுமே இருந்தது. தற்போது கற்பித்தலை தாண்டி பிற பணிகளால் பெரும் சுமையாக உள்ளது. தற்போது, 'கருணாநிதி விழா, அண்ணாதுரை விழா, நான் முதல்வன் திட்டம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் காண்பித்தல், அறிவியல் கண்காட்சி நடத்துதல், இடைநிற்றல் மாணவர்களை தேடிப்பிடிப்பது, காலணி உட்பட நலத்திட்ட பொருட்களை நோடல் மையங்களுக்கு சென்று பெற்று 'லோடு மேன்' போல் பள்ளிக்கு கொண்டு செல்வது, கலைத்திருவிழா, எமிஸ் பதிவேற்றங்கள் என கற்பித்தல் அல்லாத 100க்கும் மேற்பட்ட திட்ட பணிகளை செய்வது' தான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது.இதற்காக தான் பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ. பல கோடிகள் ஒதுக்கப்படுகிறதோ என சந்தேகம் எழுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rajarajan
நவ 28, 2024 11:32

மொதல்ல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் சேருங்க. அப்பால பொதுமக்கள் நாங்க உங்களுக்கு வக்காலத்துக்கு வரோம். அது இருக்கட்டும். உங்களோட கூடுதல் சுமைகளை வேற சில பேருக்கு கொடுத்து, உங்க சுமையை குறைக்கலாம் சரி. ஆனா, அவங்களுக்கு அதுக்கான சம்பளத்தை, உங்க சம்பளத்துல இருந்து எடுத்துக்கொடுத்தா, உங்களுக்கு சம்மதம் தானே ?? அதானே பாத்தேன், சம்பளத்துல மட்டும் எவ்ளோ சுமை கொடுத்தாலும் சந்தோசமா தாங்குவீங்களே. நோகாம நொங்கு திங்க ஆசை.


ஆரூர் ரங்
நவ 28, 2024 10:46

எல்லோரும் படிச்சி அறிவாளியா ஆயிட்டா 200 உ.பி ஸ் கிடைப்பது கஷ்டமாச்சே. இதுக்குதான் எட்டாவது வகுப்பு வரை ஓசி பாஸ்.


Nagraj Muthiah
நவ 28, 2024 10:37

ஐயா இதில் தனியார் பள்ளிகள் அடங்கும் government சரியான கற்பத்தல் இல்லை


Yasararafath
நவ 28, 2024 10:28

கற்பித்தல் இப்போது வியாபாரம் ஆகிவிட்டது.


rasaa
நவ 28, 2024 09:57

முதலில் கற்பிக்கும் ஆசிரியர்கள் முறையாக கற்றவர்களா? கற்பிக்கும் திறன், பாடம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்களா? பணம் மற்றும் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தவர்களா?


INDIAN
நவ 28, 2024 09:37

கல்வி என்பதும் கற்பித்தல் என்பதும் புத்தகத்தை மட்டுமே என்ற ஊறிப்போன உங்கள் மனநிலையில் இருந்து நீங்கள் பேசுகிறீர்கள், இதிலே சொல்லப்பட்ட எண்ணும் எழுத்தும், கலைத்திருவிழா, hitech பரிசோதனை கூடம், உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இடை நிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை இவையெல்லாம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாத விஷயங்களா? ஒருவேளை ஆசிரியர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கிறது என்றால் அதை சுட்டிக்காட்டுங்கள் ,அதைவிடுத்து திராவிடம் கல்வியை சீரழித்து விட்டது என்றால் இங்கே ஆசிரியர்கள் செய்யும் எந்த பணி கல்வியை சீரழிக்கிறது என்று கூறுங்கள் , இல்லையேல் நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 09:06

நல்ல கற்பனை வளம் பொருந்திய கட்டுரை. கல்வித்துறையின் சிறப்பை அறிய, ஒன்றிய அரசின் நிதி அயோக் அறிக்கை பார்க்க : தமிழ் நாடு கல்வித்துறையில் 5 ஆம் ரேங்க். கடைசி ரேங்க் எது தெரியுமா? உத்திரபிரதேசம். நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் Niti aayok அறிக்கை சொல்கிறது. உத்தரபிரதேசத்தில் திராவிட கட்சியின் ஆட்சியா?


SUBBU,MADURAI
நவ 28, 2024 09:35

The two major states where the number of new companies formation has declined is West Bengal and Chennai.


ஆரூர் ரங்
நவ 28, 2024 10:44

அதே மத்திய கல்வி சர்வே என்ன சொல்கிறது? டாஸ்மாக் நாட்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட சரியாக படிக்க வரவில்லை. ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை. சாதாரண வகுத்தல் கணக்கு வரவில்லை. இதுக்கு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர்கள் எதுக்கு ?


S. Venugopal
நவ 28, 2024 11:22

எங்கு பின்னிலையில் உள்ளதோ அங்கு நிதி அதிகம் ஒதுக்க ஏதுவாக இருக்கலாம்


S. Venugopal
நவ 28, 2024 09:05

எல்லா பள்ளி கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கும் பயிலும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சார வரம்பும் முன்பைவிட அதிகரிக்கப்பட்டள்ளது மற்றும் கல்லுரிகளில் நம்பர் ஆப் கிரெடிட்ஸ்ம் மாணவர்ககளின் நலன் காக்க ? குறைக்கப்பட்டளது


ஆரூர் ரங்
நவ 28, 2024 09:03

இதெல்லாம் அறிந்தும்தானே ஒவ்வொரு பணியிடத்துக்கும் ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்? சைடு பிசினெஸ் ரியல் எஸ்டேட், கந்துவட்டி நடத்த mattum நிறைய நேரம் கிடைக்கிறதே?


karthik
நவ 28, 2024 08:54

கல்வித்துறை கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறது திராவிட கும்பல்கள்.


முக்கிய வீடியோ