மேலும் செய்திகள்
தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
15-Sep-2025
சாத்தான்குளம்:வீட்டில் தனியாக இருந்த, ஆறாம் வகுப்பு மாணவர், தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் முதலுார் சாலை பகுதியை சேர்ந்த தொழிலாளி குமார். இவரது மகன் சக்திவேல், 11; ஆறாம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம், மாணவர் சக்திவேல் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்ற பெற்றோர் மாலையில் வீடு திரும்பியபோது, சக்திவேல் அங்கு இல்லாததால் பல இடங்களில் தேடினர். இதற்கிடையே, வீட்டிற்குள் இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் சிறுவன் சக்திவேல் மூர்ச்சையாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவ மனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாத்தான்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025