உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ரேஷன் கார்டு கேட்டு 1.10 லட்சம் பேர் காத்திருப்பு

புதிய ரேஷன் கார்டு கேட்டு 1.10 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் தனி சமையல் அறையுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 40,000 குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்தன. 2023ல், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய்உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமலானது.அதனால், திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்தவர்கள், உரிமைத்தொகை பெறுவதற்காக, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். எனவே, ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, மீண்டும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில், 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எல்லாம் தங்கள் விண்ணப்பங்களை ஏற்று, விரைவில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்க, வீடுதோறும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க, ரேஷன் கார்டு அவசியம் என்பதாலும், விரைவாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Santhana selvi
ஜூலை 12, 2025 14:51

சந்தன செல்வி


Alagumurugan Murugan
ஜூலை 09, 2025 14:23

ரேஷன் கார்டு அத்தியவாசமானது அதை காலங்கள் கடக்கமால் விரைவாக வழங்கவேண்டும் ...


Varadarajan Nagarajan
ஜூலை 09, 2025 08:33

அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்காக பணம்கொடுத்தால் அது கட்சி நிதியிலிருந்து செலவழிக்கப்படும். அதற்குப்பதிலாக புதிதுபுதிதாக குடும்ப அட்டைகளை வழங்கி வரிப்பணத்திலிருந்து இலவசங்களை அள்ளிக்கொடுத்தால் அதற்கு பெயர் நலத்திட்டம். ரேஷன் கடைகளுக்கு இன்னோவா காரில் வந்து இறங்கி கை ரேகையை மட்டும் வைத்துவிட்டு மீண்டும் ஏசி காரில் போய் அமர்ந்துகொண்டு ட்ரைவர் ரேஷன் சாமான்களை தூக்கி கொண்டு காரில் வைப்பது பல இடங்களில் பார்க்கலாம். அதற்க்கு மத்திய அரசின் நிதியு பெறப்படுகின்றது. இப்படித்தான் மக்கள் வரிப்பணம் வீடிக்கப்படுகின்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை