உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி

பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. பழநி முருகன் கோயிலில் பிப்.11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பயணிகள் பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர். 2024 டிசம்பருக்கு முன்னதாகவே பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளது. அதிகளவிலான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, கன்னிவாடி, நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், வடமதுரை, அய்யலுார், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழநி சுற்று வட்டார பகுதிகள் வழியாக வருகின்றனர். அப்போது வழித்தடங்களில் பக்தர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், தனியார் நிறுவனத்தினர் அன்னதானம் வழங்குகின்றனர். ரோட்டோரங்களில் சில ஊர்களில் வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதாரமில்லாமலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். மீறி வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதுமிருந்து அன்னதானம் வழங்க விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்தனர். தற்போது வரை 110 பேருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை ஒருஆண்டுகளுக்கு பயன்படுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். தினமும் நடக்கும் அன்னதான கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏதேனும் குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Murugan
ஜன 31, 2025 09:48

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்பவர்கள் பொதுவாக லாப நோக்கத்தோடு செய்வதில்லை. அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்க மிகவும் பக்தியோடு பசியோடு வரும் பக்தர்களுக்கு மிகவும் அக்கறையுடன் செய்வார்கள். அதற்காக அனுமதி பெறுவதற்கு ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். அன்னதானம் கொடுப்பவர்கள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அன்னதானம் முடிந்த பிறகு அதனால் ஏற்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வேண்டுமானால் உணவு பாதுகாப்புத் துறையினர் வழங்கலாம் அதற்காக அனுமதிக்கு குறைந்தபட்ச கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ஆயிரம் ரூபாய் என்பது அன்னதானம் கொடுப்பவர்களுக்கு சற்று வேதனையை கொடுக்கும் செயலாகவே தோன்றுகிறது.


karuthanga karuthanga
ஜன 30, 2025 18:59

நல்ல ஒரு செயல்பாடு. அரசு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுதற்குரியது .இந்த செயல்பாட்டினை ஒவ்வொரு உணவு விடுதிகளிலும் பின்பற்றப்பட்டால் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க பெறும். நான் அறிந்த வகையில் நிச்சயமாக ஒரு சுகாதாரமற்ற ஒரு சூழலில் உணவினை தயாரித்து பக்தர்களுக்கு விநியோகிப்பது தவறான செயல் .தவிர இப்படிப்பட்ட ஒரு தவறை மனிதநேயமிக்க எந்த ஒரு அமைப்பு நிறுவனமோ செயல்படுத்த முனைவதில்லை என்று நான் கருதுகிறேன் இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளது என்பதை மேற்கண்ட துறைகள் வெளிப்படுத்துமா?


தமிழ்வேள்
ஜன 28, 2025 21:19

110-ல் எத்தனை சிறுபான்மையினர்? போலி ஹிந்து லேபிளில்....கருத்தடை மருந்து கலந்தும், எச்சில் துப்பி, கழிவுகள் கலந்தும் அன்னதானம் என்ற பெயரால் ஹிந்து தர்மத்தை ஜனங்களை கேவலப்படுத்தி மகிழும் திராவிஷ பொழுதுபோக்கை நிகழ்த்த திராவிட கும்பலின் ஹிந்து விரோத அரசும் கட்சியும் முடிவு செய்து விட்டன போலும் ...


Ramesh Sargam
ஜன 28, 2025 20:00

கோவிலுக்கு வரும் முருக பக்தர்களுக்கு வயிறார, சுவையான, நேர்த்தியான உணவை கொடுக்கவேண்டும்.


கந்தண்
ஜன 28, 2025 19:47

இதெல்லாம் ஆணவத்தின் உச்சம். இதற்குறிய தண்டனை கிடைத்தே தீரும்


புதிய வீடியோ